பறக்கும் காரும் வந்தாச்சு.. உலகின் முதல் நாடாக அமெரிக்கா அனுமதி.. எப்படி இயங்கும்? எவ்ளோ ஸ்பீடு?
வாஷிங்டன்: உலகின் முதல் பறக்கும் காருக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் போக்குவரத்து முறையில் மிகப்பெரும் புரட்சியாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை காணலாம்.
உலக வல்லரசு நாடான அமெரிக்கா எப்போதும் விண்வெளி ஆராய்ச்சியிலும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளும் முதன்மை வகிக்கும். அதேபோலத்தான் மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் பல புதுப் புது தொழில் நுட்பங்களை அமெரிக்க நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே ஓட்டுநரின் துணையின்றி தானாகவே இயங்கக்கூடிய கார்களை டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்து உள்ளன.

அதேபோல், சாலைகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கும் வகையில், பறக்கும் கார்கள் குறித்த ஆய்வு தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் அலெஃப் ஏரோனெடிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, பறக்கும் கார்களுக்கு அனுமதி கோரி அமெரிக்கா அரசிடம் விண்ணப்பித்து இருந்தது.
தற்போது பறக்கும் கார்களுக்கான அனுமதியை அமெரிக்கா கொடுத்துள்ளது. உலகிலேயெ பறக்கும் கார்களுக்கு கிடைத்து இருக்கும் முதல் அனுமதி இதுவாகும். மின்சாரத்தில் இயங்கக்கூடிய இந்த காரில் இரண்டு பேர் வரை பயணம் செய்ய முடியும். காரின் விலை $300,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்ட இடங்களில் இந்த கார் மிகவும் பயனுள்ளதகாக இருக்கும் காரை உற்பத்தி செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனிநபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பல தரப்பினரும் இந்த காரை வாங்க ஆர்டர் போட்டு இருப்பதாகவும் வரும் 2025ம் ஆண்டு இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு பறக்கும் கார்களை வழங்க முடியும் எனவும் ஆனால், இக்கார் சாதாரண சாலையில் மணிக்கு 25 மைல்களுக்கு மேல் செல்லாது. இந்த பறக்கும் கார் குறைந்த வேகம் கொண்டது Alef Aeronautics நிறுவனம் கூறியுள்ளது.
வழக்கமான நகர்புற அல்லது ஊரக சாலைகளில் பயணம் செய்யும் வகையிலே இந்த கார் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் வழக்கமான கேரேஜ்களிலே இதனை பார்க்கிங் செய்ய முடியும். மணிக்கு 25 மைல்ஸ் வேகத்திற்கு மேல் இந்த கார் பயணிக்காது எனவும் கூறப்படுள்ளது. முழுவதும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய இந்தக் கார் செங்குத்தாக நின்ற இடத்தில் நின்றபடியே அப்படியே மேலே சென்று பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்தில் ஒரு புதிய புரட்சியை பறக்கும் கார்கள் ஏற்படுத்தலாம் என்கிறார்கள் அத்துறையை சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications