பூமியை கண்காணிக்கும் ஏலியன்கள்? நாசா கண்டுபிடித்த மர்ம பொருள்! என்ன அது?
வாஷிங்டன்: சூரிய குடும்பத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஒரு பொருள் பூமியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பொருள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து தெரியவில்லை. எனவேதான் இது குறித்து விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். அநேகமாக இது ஏலியன் ஸ்பேஸ் ஷிப்பாக கூட இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வைட் ஃபீல்ட் கேமரா மூலம் கடந்த ஜூலை 21ம் தேதி இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு விஞ்ஞானிகள் 3I/ATLAS என பெயரிட்டிருக்கின்றனர். இதுவரை மொத்தம் மூன்று பொருட்கள் மட்டும்தான் இதுபோன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் இது மூன்றாவது பொருளாகும்.

முதலில் கடந்த 2017ம் ஆண்டு 1I/ʻOumuamua எனும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவதாக கடந்த 2019ம் ஆண்டு 2I/Borisov எனும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற விண்வெளிப் பொருள்கள் வேற்று கிரகத் தொழில்நுட்பமாக இருக்கலாம் என்ற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. மூன்றாவதாக கண்டுபிடிக்கப்பட்ட பொருள் குறித்து ஹார்வர்ட் விஞ்ஞானி அவி லோப் கூறுகையில், "3I/ATLAS எனும் பொருள் வால்நட்சத்திரத்தை போல தெரிந்தாலும் இது சொந்தமாக ஒளியை உமிழும் தன்மை கொண்டதாக இருக்கிறது" என தெரிவித்திரக்கிறார்.
வால்நட்சத்திரத்திரத்திற்கு சொந்தமாக ஒளியை உமிழும் தன்மை கிடையாது. அது சூரியன் போன்ற நட்சத்திரத்திலிருந்து ஒளியை பிரதிபலிக்கின்றன. எனவேதான் அது பிரகாசமாக தெரிகிறது.
விஞ்ஞானி லோப் மேலும் கூறுகையில், "3I/ATLAS பொருளின் மையப்பகுதி பெரும்பாலான ஒளியை உருவாக்குகிறது. எனவே இது ஒரு விண்கலமாக இருக்கலாம், அது அணுசக்தி மூலம் இயங்கலாம். அதன் முன்பக்க மேற்பரப்பில் இருந்து வெளிப்படும் தூசி, அதன் விண்மீன் பயணத்தின் போது குவிந்த அழுக்காக இருக்கலாம். உதாரணத்திற்கு காரில் வேகமாக போகும்போது தூசிகள் காரின் கண்ணாடியில் ஒட்டிக்கொள்கிறதை போல இருக்கலாம் என கூறுகிறார்.
இதெல்லாம் இருக்கட்டும், உண்மையில் ஏலியன்கள் இருக்கிறதா? இல்லை? என்பதை மட்டும் சொல்லுங்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு பதிலும் இருக்கிறது.
ஏலியன்கள் தியரி
நாம் சூரிய குடும்பத்தில் இருக்கிறோம். பூமியில் உயிர்கள் வாழ காரணம் சூரியன்தான். நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டத்தில் சுமார் 100-400 பில்லியன் சூரியன்கள் இருக்கின்றன. ஒரு பில்லியன் என்பது 1 எனும் எண்ணுக்கு பக்கத்தில் 11 பூஜ்ஜியங்களை போட்டால் வரும் தொகைதான். நம்முடைய அண்டத்தை பேல கோடிக்கணக்கான அண்டங்கள் இருக்கின்றன. அதில் எவ்வளவு சூரியன் இருக்கும்? எத்தனை சூரி குடும்பங்கள் இருக்கும்? அதில் ஒன்றில் கூடவா உயிர்கள் இல்லாமல் போகும்?
இதுதான் ஏலியன் தியரி. இந்த தியரிக்கு வலு சேர்க்கும் கூற்றுகள் சில இருக்கின்றன. உதாரணமாக பிரபஞ்சத்தில் பல இடங்களில் நீரும் ஆக்சிஜனும் இருப்பது கண்பிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே உயிர்கள் வாழலாம். மட்டுமல்லாது நமது பூமியில் உள்ள உயிர்கள் அனைத்தம் கார்பனால் ஆனது. வேற்று கிரகத்தில் இருக்கும் ஏலியன்கள் இப்படி இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மாற்று வடிவில் கூட இருக்கலாம். வெளி கிரகத்தில் ஒரு செல் உயிரியாக இருந்தாலும் அது ஏலியன்தான்.
எனவே அடுத்த முறை வானத்தை பார்க்கும்போது நன்றாக தேடி பாருங்கள். எங்காவது பறக்கும் தட்டுக்கள் பறந்துக்கொண்டு இருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications