ஆச்சரியம் வானில்.. மேகங்கள் மீது தென்பட்ட உருவம்.. யாரந்த 3 பேர் யார்? ஏலியன்களா? வீடியோவில் அதிசயம்
வாஷிங்டன்: இணையத்தில் வீடியோ ஒன்று தற்போது டிரெண்டாகிகொண்டிருக்கிறது.. விமானத்தில் செல்லும்போது, யாரோ அந்த வீடியோவை எடுத்திருக்கிறார்கள். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்துடனும், சந்தேகத்துடனும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
வேற்றுகிரக வாசிகள் குறித்த விஷயம் பல்லாண்டு காலங்களாகவே புதிராக இருந்து வருகிறது. அதாவது மனிதர்களை போலவே, மற்ற கிரகத்திலும் கண்டிப்பாக உயிர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

அதற்கேற்றார்போல், வேற்றுகிரக வாசிகளை வைத்து ஏராளமான ஆங்கில படங்களும் வெளியாகி ஆர்வத்தை கிளப்பி வருகின்றன.. இதற்கு நடுவில், வேற்று கிரகவாசிகளை கண்ணால் கண்டதாக கூறி சிலர் அவ்வப்போது பரபரப்பையும் கிளப்பிவிட்டு வருகிறார்கள்.
நாசா அறிக்கை: எனவேதான், உண்மையிலேயே வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? என்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில்கூட, ஏலியன்கள் எனப்படும் பறக்கும் தட்டுக்கள் குறித்த ஆய்வு பற்றிய அறிக்கையை நாசா வெளியிட்டிருந்தது.
ஏலியன்கள் பற்றிய ஆய்வு செய்து, நாசாவின் சுதந்திரமான குழு இந்த மொத்தம் 33 பக்க அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. அதன்படி, விவரிக்க முடியாத சூழல்களுக்கு பின்னால் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? என்பதை உறுதி செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாம். அதேசமயம் அதற்கான சாத்தியக்கூறுகளையும் நிராகரித்து விட முடியாது என்றும் நாசா கூறியிருந்தது. எனவே, நாசாவின் ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
பரபர வீடியோ: இப்படிப்பட்ட சூழலில், மேகங்களில் மனிதர்கள் போன்ற சில உருவங்கள் நிற்கும் வீடியோவும், போட்டோவும் வெளியாகி, இணையத்தில் பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வீடியோவில், மேகங்கள் நிறைந்த பரப்பில், யாரோ 3 பேர் நிற்பதுபோல நிழல் உருவங்கள் தென்படுகின்றன.. அந்த மேகங்களில் நிற்பவர்கள் ஏலியன்கள் என்று கூறப்படுகிறது. மேகங்களில் ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த 3 பேரும் பேர் நின்றுகொண்டிருக்கிறார்கள். விமானத்தில் செல்லும்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
யார் அவர்கள்: அவர்களை ஏலியன்கள் என்று சொல்லப்படும்நிலையில் அதற்கான எந்த ஒரு சான்றுகளும் இல்லை. அதேசமயம், அவர்கள் ஏலியன்கள் இல்லை என்றும் உறுதியாக சொல்வதற்கில்லை.. அப்படியானால் அந்த 3 பேர் யார் என்று இணையவாசிகள் சந்தேகம் கிளப்பி வருகிறார்கள். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications