Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த காலத்துலயே இந்த சேட்டை பண்ணீங்களா? 70 ஆண்டு பழமையான லவ் லெட்டரில் எழுதியிருந்தது என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுமார் 70 ஆண்டு பழமையான காதல் கடிதம் ஒன்று இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். அதில் என்ன இருக்கிறது.. அந்த காதல் கடிதம் பின்னால் இருக்கும் கதை என்ன என்பதைப் பார்க்கலாம்

காதல் என்பது எல்லாருக்கும் எப்போதும் ஷ்பெஷல் தான். நமக்குப் பிடித்த நபருடன் நாம் செலவழிக்கும் நேரம் ஒவ்வொன்றும் மறக்கவே முடியாத ஒன்றாகவே இருக்கும். காதலியைப் பிரிந்து இருக்கும் போது ஏற்படும் சோகத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

Amazed to see the 70-Year-Old Love Letter written by army person to his lover

இப்போதாவது தகவல் தொடர்பிற்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் வந்துவிட்டன. ஆனால், கடந்த நூற்றாண்டில் பிரிந்து இருக்கும் காதலர்கள் பேசும் ஒரே விஷயமாகக் காதல் கடிதங்கள் இருந்தன.

காதல் கடிதம்: அப்படிதான் அமெரிக்காவில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட காதல் கடிதம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த ரிக் ட்ரோஜனோவ்ஸ்கி என்ற நபர் இந்த காதல் கடிதத்தைப் பொதுவெளியில் வெளியிட்டுள்ளார். இந்த நபர் கடந்த 2017ஆம் ஆண்டில் விவசாய பண்ணை ஒன்றை ஏலத்தில் எடுத்து இருந்தார். அந்த பண்ணையில் இருந்த டூல் பாக்ஸில் தான் இந்த காதல் கடிதம் இருந்துள்ளது.

70 ஆண்டுகளுக்கு முன்பு சான் ஃபிரான்சிஸ்கோவில் வசித்து வந்த ராணுவ கார்போரல் இர்வின் ஜி ஃப்ளெமிங்க் என்பவரால் இந்த காதல் கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. மிச்சிகனில் உள்ள கிராண்ட் ரேபிட்ஸில் வசிக்கும் மேரி லீ கிரிப்ஸ் என்பவருக்கு இந்த காதல் கடிதம் எழுதப்பட்டுள்ளது. காதலன் இர்வின் தனது காதலி மேரிக்கு எழுதிய இந்த கடிதத்தில் காதல் நிரம்பி வழிகிறது. இந்த லவ் லெட்டர் குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது குறித்து நெட்டிசன்கள் நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

என்ன சொல்லி இருக்கிறார்: இருவரும் ஏதோ ஒரு விஷயத்திற்காக முன்பு சண்டை போட்டுள்ளனர்.. இதற்காக இர்வின் இந்த கடிதத்திலேயே மன்னிப்பும் கேட்டுள்ளார். மேலும், மேரியை காதலிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ராணுவத்தில் இருந்து திரும்பியவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த கடிதத்தை இணையத்தில் பகிர்ந்துள்ள ரிக், இதை உரிமையாளரிடம் சேர்க்க வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் உள்ளூர் ஊடகங்கள் மற்றும் நெட்டிசன்களிடம் உதவியும் கேட்டுள்ளார். இர்வின் மற்றும் மேரியை கண்டுபிடித்து காதல் கடிதத்தைத் தர போவதாகத் தெரிவித்துள்ளார். எல்லாவற்றையும் தாண்டி இர்வின்- மேரி ஜோடி ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பது குறித்தும் பார்க்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சண்டையும் சமாதானமும்: அவர்களுக்கு என்ன ஆனது என்பதற்கு விடையைக் கண்டறியும் முயற்சியில் தான் இர்வின் இறங்கி இருக்கிறார். மேலும், அப்போதே காதலில் சண்டையும் பிறகு சமாதானமும் இருந்துள்ளது என்பதை இந்த லவ் லெட்டர் காட்டுகிறது. இது குறித்து ரிக் கூறுகையில், "இதைப் பார்க்கும் போது எதோ சினிமாவில் வருவது போலத் தான் இருக்கிறது. மக்கள் இப்போதெல்லாம் இப்படி எதையும் எழுதுவதில்லை; இது கிட்டத்தட்ட கவிதை போல இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல நெட்டிசன்களும் இந்த காதல் கடிதத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்த ப்ளூ டிக் காலகட்டத்தில் மெசேஜ்ஜிற்கு 2 நிமிடம் தாமதமாக ரிப்ளை வருவதையே இளசுகளால் பொறுக்க முடிவதில்லை. ஆனால், அந்தக் காலகட்டத்தில் பல நாட்கள் அல்லது வார இடைவெளியில் காதலைக் கடிதங்கள் மூலம் பரிமாறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+