59 வயதில் 2ஆவது திருமணம்.. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸுக்கு டும் டும் டும்! பொண்ணு யார் தெரியுமா
வாஷிங்டன்: அமேசான் நிறுவனரும் உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பேசோஸ் தனது 59 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
உலகின் டாப் பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவர் ஜெப் பெசோஸ்.. உலகின் மிகப் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி 'Blue Origin' என்ற ஸ்பேஸ் சார்ந்த நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார்.
இவருக்கும் மெக்கென்சி ஸ்காட் என்ற பெண்ணை 1953ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டிருந்தார். இந்த ஜோடி பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த நிலையில், 2019இல் அவர்கள் விவாகரத்து பெற்றனர்.

ஜெப் பெசோஸ்: அப்போதே ஜெப் பெசோஸ் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்ததாகவும் இதன் காரணமாகவே மெக்கென்சி ஸ்காட் அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றதாகவும் அப்போதே தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் 59 வயதான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், தனது காதலியான லாரன் சான்செஸ் என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஜோடி தற்போது பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்குச் சென்றுள்ளனர். அப்போது நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் கலந்து கொண்டிருந்த போது, நிச்சயதார்த்த மோதிரத்தை அணிந்திருந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றனர். பல மாதங்களாகவே ஜெப் பெசோஸ் தனது காதலியான லாரன் சான்செஸை மணக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி வருவது நினைவுகூரத்தக்கது.
எப்படி பழக்கம்: லாரனை ஜெப் பேசோஸ் 2018இல் டேட் செய்யத் தொடங்கினர். அப்போதே அவர்கள் ஒன்றாக இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், ஜெப் பேசோஸ் தனது முதல் மனைவி மெக்கென்சியிடம் இருந்து விவாகரத்து பெறும் வரை இதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
பெசோஸ் மற்றும் மெக்கென்சி ஜோடி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த விவகாரத்தில் மெக்கென்சி 38 பில்லியன் டாலரை (ரூ.3 லட்சம் கோடி) விவாகரத்தில் பெற்றார். மேலும், அவருக்கு அமேசான் நிறுவனத்திலும் குறிப்பிடத்தக்கப் பங்குகள் உள்ளன. உதன் மூலம் அவர் டாப் பணக்கார பெண்களில் ஒருவரானார்.
யார் இவர்: இப்போது ஜேப் பேசோஸ் கரம் பிடிக்க உள்ள லாரன், முன்பு பேட்ரிக் வைட்செல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். இந்த ஜோடிக்கு எல்லா மற்றும் இவான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதேபோல முன்னாள் கூடைப்பந்து வீரரான டோனி கோன்சாலஸ் என்பவருடன் அவருக்கு 22 வயது மகனும் இருக்கிறார்.
லாரன் 1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் அல்புகெர்கியில் பிறந்தவர்.. 53 வயதான லாரன் சான்செஸ் முன்பு செய்தியாளராக வேலை செய்த அனுபவம் கொண்டவர். அவர் செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் 2011 முதல் 2017 வரை குட் டே LA என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
இது மட்டுமின்றி அவர் தி லாங்கஸ்ட் யார்டு, ஃப்ளைட் கிளப் மற்றும் டெட் 2 போன்ற படங்களிலும் நடித்தார். மேலும், பறப்பதில் அதீத ஆர்வம் கொண்ட அவரிடம் ஹெலிகாப்டர் பைலட் உரிமமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications