அமெரிக்காவின் நம்பர் ஒன் பணக்காரர்...ஜெப் பெசோஸ்... ட்ரம்புக்கு மிகப்பெரிய பின்னடைவு!!
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை தொடர்ந்து மூன்றாவது முறையாக பின்னுக்குத் தள்ளி ஜெப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். கொரோனா வைரஸ் முடக்கம் ட்ரம்ப்பின் வர்த்தகத்தை பெரிய அளவில் முடக்கிப் போட்டுள்ளது.
அமேசான் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமாக இருப்பவர் ஜெப் பெசோஸ். 400 பேர் கொண்ட ஃபோர்ப்ஸ் பட்டியலில் சொத்து மதிப்பு 3.2 டிரில்லியன் டாலராக பதிவாகி இருக்கிறது. இதிலும் நம்பர் ஒன்னாக ஜெப் பெசோஸ் இடம் பிரித்துள்ளார். கொரோனா முடக்கத்திலும் அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்கள் எந்த தடையும் இல்லாமல் வர்த்தகத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 11 மில்லியன் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

நடப்பாண்டு பட்டியலில் 18 பேர் புதிதாக இணைந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் ஜூம் வீடியோ கம்யூனிகேஷன் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான், இவரது நிகர சொத்து மதிப்பு 11 பில்லியன் டாலர் என்பது தெரிய வந்துள்ளது.
ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 57% அதிகரித்து 179 பில்லியன் டாலராக இருக்கிறது.
கடந்தாண்டு அதிபர் டிரம்ப்பின் நிறுவனம் போர்ப்ஸ் பட்டியலில் 275வது இடத்தில் இருந்தது. நடப்பாண்டில் இது 352வது இடத்துக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இவரது நிகர சொத்து மதிப்பு கடந்தாண்டில் 3.1 பில்லியன் டாலராக பதிவாகி இருந்தது. இது நடப்பாண்டில் 2.5 பில்லியன் டாலராக பதிவாகி இருக்கிறது. ட்ரம்ப் நிறுவனம் பெரும்பாலும் ஓட்டல்கள், ரெசார்ட்கள், அலுவலக கட்டிடங்கள் கட்டுவதில் ஈடுபட்டுள்ளது. கொரோனா முடக்கம் காரணமாக இவை அனைத்தும் முடங்கி இருந்தன. இதனால் ட்ரம்ப்புக்கு வர்த்தகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலமாக ட்ரம்ப் தனது வரி குறித்த தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார். இதனால், இவருக்கும், மன்ஹாட்டன் அட்டார்னி ஜெனரலுக்கும் இடையே நீண்ட கால மோதல் நடந்து வருகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications