அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய்.. மார்பில் திடீர் புண்.. அறுவை சிகிச்சையில் அகற்றம்
அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடனுக்கு வயது 80 ஆகும்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தோல் புற்றுநோயால் மார்பு பகுதியில் ஏற்பட்ட புண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ள விவரம் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளார். 2021ல் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறுகிறது. தற்போது அதிபராக உள்ள ஜோ பைடனுக்கு 80 வயது ஆகிறது.
இதனால் அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டபோதே விமர்சனங்களை சந்தித்தார். இந்த விமர்சனங்களுக்கு காரணம் அவரது வயதாகும். மேலும் வயது முதிர்வு காரணமாக அவர் தவறி கீழே விழும் சம்பவங்களும், டெலிப்ராம்டரை பார்த்து அவர் தவறாக படிக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.

தோல் புற்றுநோய் பாதிப்பு
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த தகவல் வெளியாகி உள்ளன. மார்பு பகுதியில் அவருக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதாவது மார்பு பகுதியில் புற்றுநோய் திசுக்களால் தோல் புற்றுநோய்க்கான புண் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

மார்பு பகுதியில் லிஷன் அகற்றம்
மேலும் மார்பு பகுதியில் தோல் புற்றுநோய்க்கு காரணமான லிஷன்(புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியில் திசுக்களால் ஏற்பட்ட புண்) அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்த தகவலை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் டாக்டர் கெவின் ஓ கான்னர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:

சிகிச்சை தேவையில்லை
ஜோ பைடனின் மார்பு பகுதியில் உள்ள லிஷன் அகற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தோம். தற்போது அவர் நலமாக உள்ளார். இனி அவருக்கு எந்த சிகிச்சையும் தேவைப்படாது. அவருக்கு ஏற்பட்ட தோல் புற்றுநோயை நினைத்து பயப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் களமிறங்க விருப்பம்
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மீண்டும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட ஆர்வமாக உள்ளார். அதேபோல் அவரை எதிர்த்து மீண்டும் ஜோ பைடன் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி ஜில் பைடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு தோல் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பிரச்சனை உள்ளிட்டவை அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஜோ பைடனுக்கு எதிரானதாக மாறலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications