30 ஆண்டுகளில் 90 கொலைகள்... அமெரிக்காவின் கொடூர சீரியல் கில்லர் மரணம்!
வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமான கொலைகள் செய்த கொடூர சீரியல் கில்லர் சாமுவேல் லிட்டில் உடல்நலக்குறைவால் இறந்தார். அவருக்கு வயது 80.
1970 மற்றும் 2005 க்கு இடையில் 93 கொலைகளை இவர் செய்து இருக்கிறார். நீரிழிவு நோய், இதயக் கோளாறு மற்றும் பிற வியாதிகளால் பாதிக்கப்பட்டு அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3 பெண்களைக் கொலை செய்ததற்காக, கடந்த 2014-ம் ஆண்டு கைதுசெய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சாமுவேல் லிட்டில் . அதன்பிறகு அவர் கொடுத்த வாக்குமூலம்தான் விசாரணை அதிகாரிகளையே தூக்கிவாரி போட்டது. அதாவது 1970 மற்றும் 2005 க்கு இடையில் 93 கொலைகளைச் செய்திருப்பதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் 19 மாகாணங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், போதைக்கு அடிமையானவர்கள் என 93 பேரைக் அவர் கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில்,முதலில் வாய் திறக்காமல் அமைதிகாத்த சாமுவேலிடம், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 700 மணி நேரத்துக்கும் மேலாக மேற்கொண்ட விசாரணையின் முடிவிலேயே கொலைகள் குறித்த தகவல்கள் வெளியே வந்திருக்கிறது.
சாமுவேலின் நினைவுத்திறன் அபாரமானது. கொலைகள் நடந்த இடங்கள், கொலை செய்யப்பட்ட பெண்கள் என 1970-களில் நடந்த சம்பவங்களைக்கூட திரையில் ஓடும் காட்சிகளைப் போல் அவர் அதிகாரிகளிடம் விவரித்தார். ஓவியம் வரைவதில் ஈடுபாடு இருப்பதாக சாமுவேல், தான் கொலை செய்த 50-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களை வரைந்து கொடுத்திருக்கிறார்.
அவர் செய்த கொலைகளில் 60 கொலைகள் இதுவரை உறுதிப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் சாமுவேல் லிட்டில் உயிரிழந்துள்ளார். நீரிழிவு நோய், இதயக் கோளாறு மற்றும் பிற வியாதிகளால் பாதிக்கப்பட்ட சாமுவேல், கலிபோர்னியா மருத்துவமனையில் இறந்தார் என்று மாநில திருத்தங்கள் மற்றும் மறுவாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications