டெல்லி டூ அமெரிக்கா.. அரை மணி நேரத்தில் போயிடலாம்! எலான் மஸ்க்கின் அடுத்த மெகா பிளான்
வாஷிங்டன்: ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு 40 நிமிடங்களில் செல்லும் தொழில்நுட்பம் கொண்ட பயண சேவையை அறிமுகம் செய்ய எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். எலான் மஸ்க்கின் இந்த கனவு திட்டத்திற்கு அமெரிக்கா விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஸ்டார்ஷிப் என்றால் என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலம்.
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறார். எதிர்காலத்திற்கான பல்வேறு முன்னோடி திட்டங்கள் குறித்தும் எலான் மஸ்க் அடிக்கடி பேசி வருகிறார்.

எலான் மஸ்கின் நிறுவனம் பல்வேறு திட்டங்களை தற்போதே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஸ்டார்லிங் எனப்படும் சேட்டிலைட் வழியாக இணைய சேவையை அவரது நிறுவனம் பல்வேறு நாடுகளிலும் வழங்கி வருகிறது. நகரம், கிராமம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து இடத்திற்கும் ஒரே வேகத்தில் இணைய இணைப்பை இது வழங்கும் என்று சொல்லப்படுகிறது.
மனித மூளையில் சிப் பொருத்தி, சிந்தனை மூலமே செல்போன், கணினி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் நியூராலிங் திட்டத்தின் சோதனை ஆகியவற்றையும் எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நாசாவிற்கு இணையாக விண்வெளி துறையில் போட்டியிட்டு வருகிறது. எதிர்கால தொழில் நுட்பத்தில் தீவிர ஆர்வம் காட்டி வரும் எலான் மஸ்க், தற்போது அதிவேக போக்குவரத்தை அறிமுகம் செய்யவும் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
அதாவது, கண்டம் விட்டு கண்டம் கூட சில நிமிடங்களில் செல்லக் கூடிய அதிவேக திறன் கொண்ட ஸ்டார்ஷிப் என்ற திட்டத்தை எலான் மஸ்க் நிறுவனம் முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் என்ஜினீயர் அலெக்ஸ் என்பவர் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் டொனால்டு டிரம்ப் ஆட்சியில் உலகின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கான ஸ்டார் ஷிப் திட்டத்தின் அனுமதி சில ஆண்டுகளில் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் மூலம் உலகின் எந்த மூலைக்கும் ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், தற்போது இது சாத்தியம் எனக் கூறியுள்ளார். அமெரிக்காவின் விமான போக்குவரத்து ஆணையம் இந்த திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாக யூகங்களும் கிளம்ப தொடங்கியுள்ளன.
Under Trump's FAA, @SpaceX could even get Starship Earth to Earth approved in a few years — Taking people from any city to any other city on Earth in under one hour. pic.twitter.com/vgYAzg8oaB
— ALEX (@ajtourville) November 6, 2024
இந்த ஸ்டார்ஷிப் என்பது அதிவேகத்தில் பயணிக்க கூடியதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு பயணத்திற்கு ஆயிரம் பேரை அழைத்து செல்ல முடியும் எனவும், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து டொரண்டோவிற்கு வெறும் 24 நிமிடங்களிலும் செல்ல முடியும் அளவுக்கு அதிவேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும். டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு 30 நிமிடங்களில் செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது. ஸ்டார்ஷிப் எப்படி இயங்கும் என்பது குறித்து வீடியோ வெளியாகியுள்ளது.
பயணிகள் அனைவரும் ஒரு கப்பலுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அந்தக் கப்பலில் நிறுத்தப்பட்டுள்ள ராக்கெட் ஒன்றில் பயணிகள் ஏற்றப்படுகிறார்கள். பயணிகளுடன் அந்த ராக்கெட் விண்ணை நோக்கி பாய்கிறது. நியூயார்க்கில் இருந்து காலை 6.30 மணிக்கு கிளம்புவது போலவும் ஷாங்காய் நகரை 39 நிமிடத்தில் சென்றடைந்து விடும் என சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் அந்த ராக்கெட் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடியாக செல்லும் விமானத்தில் சென்றால் 15 மணி நேரம் ஆகிறது. ஆனால் ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் 40 நிமிடங்களில் சென்று விட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் அதன் வேகம் எவ்வளவாக இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.. எலான் மஸ்க்கின் அடுத்த எதிர்கால திட்டம் இதுதான் எனவும் இனி பக்கத்து ஊருக்கு செல்வது போல பக்கத்து கண்டத்திற்கு சென்றுவிடலாம் போல என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications