டிரம்ப் சொன்ன ஒரே வார்த்தை.. தாறுமாறாக எகிறிய அமெரிக்க சந்தை! நாளை உலகம் முழுக்க எதிரொலிக்க போகுது
வாஷிங்டன்: கிரீன்லாந்து மீது ராணுவ நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் டிரம்ப் பேசியதன் காரணமாக அமெரிக்க சந்தைகள் ஏற்றம் கண்டன. இதனால் முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதே நிலை நாளை உலகம் அளவில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.
டென்மார்க்கின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்து மீது அமெரிக்காவிற்கு நீண்ட காலமாகவே ஒரு கண் இருந்து வருகிறது. இயற்கை வளங்கள் நிறைந்த பனிப்பிரதேசமான கிரீன்லாந்தில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அமெரிக்காவுக்கு தேவைப்படுவதாக டிரம்ப் சொல்லி வருகிறார்.

டிரம்பின் இந்தக் கருத்துக்கு கிரீன்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற போதிலும் டிரம்ப் இவ்வாறு பேசி வருகிறார். இதனால், கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கப் போகிறதா என்று கூட பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தூபம் போடுவது போல டிரம்பின் செயல்பாடுகளும் இருந்தன.
டிரம்ப் நேற்று கூட தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், கனடா, கிரீன்லாந்து உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய அமெரிக்காவின் வரைபடத்தை ஏஐ மூலமாக தயாரித்து வெளியிட்டு அதிரவைத்தார். கிரீன்லாந்தை எப்படியாவது தங்களுக்கு வேண்டும் என்று போகும் இடமெல்லாம் சொல்லிக்கொண்டே வருகிறார் டிரம்ப்.
இதனால், கிரீன்லாந்தை கைப்பற்ற எந்த எல்லைக்கும் டிரம்ப் போவார் என்றுகூட சர்வதேச நோக்கர்கள் மத்தியில் பேசப்பட்டது. டொனால்ட் டிரம்பின் முன்மொழிவால் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வந்தது. இதனால், பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டன. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு கருதி தங்கம், வெள்ளியில் முதலீட்டை அதிகரித்ததால் வரலாறு காணாத உச்சத்தை தங்கம், வெள்ளி விலை பார்த்து வருகிறது.
உலகப்போர், வர்த்தக போர் ஏற்படும் அச்சம் காரணமாக அமெரிக்க சந்தையில் நேற்று ஒரே நாளில் சுமார் $1.4 டிரில்லியன் சந்தை மதிப்பு அழிக்கப்பட்டு உள்ளது. இதன் இந்திய மதிப்பு ₹1,40,000,00,000,000 ஆகும். அதாவது 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் இன்று நிலமை தலைகீழாக மாறியது.
கிரீன்லாந்து மீது ராணுவ நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் டிரம்ப் பேசினார். இதன் காரணமாக அமெரிக்க சந்தைகள் ஏற்றம் கண்டன. இதனால் முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதே நாளை உலகம் அளவில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications