உலகிலேயே முதன்முறையாக மான்களில் ஒமிக்ரான்.. எப்படி பரவியது?.. அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா..!
மான்களுக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
வாஷிங்டன்: வெள்ளை வால் மான்களிடம், 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2 வருடங்களாகவே, கொரோனாவைரஸ் உலகையே கட்டிப்போட்டு வரும் நிலையில், விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.. இதனால் பல விலங்குகள் உலகம் முழுவதும் உயிரிழக்கவே செய்தன.
இதுகுறித்து ஆய்வுகளும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.. அந்த வகையில், விலங்குகளுக்கிடையில் வைரஸ் பிறழ்வடைந்து மனிதர்கள் மத்தியில் புதிய தொற்று பரவல்களை ஏற்படுத்தும் சாத்தியம் குறித்தும் விலங்கு நல அறிவியலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

உலக விலங்கு அமைப்பு
32 நாடுகளில் சிங்கம், புலி, பூனை, நாய், லிங்ஸ், மிங்க் வரை பல உயிரினங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக, உலக விலங்கு நல அமைப்பு கூறியிருந்தது.. ஆனால், இந்த விலங்குகளில், கிட்டத்தட்ட அனைத்தும் உயிரியல் பூங்காக்கள் மற்றும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்ததால் மற்ற விலங்குகளுக்கு பரவாமல் பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது... இந்நிலையில், அமெரிக்காவில், அயோவா மாகாணத்தில் வாழும் மான்களை வைத்து விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினார்கள்..

17 மான்கள்
கடந்த டிசம்பர் 12-ந் தேதியில் இருந்து ஜனவரி 31-ந் தேதிவரை, மொத்தம் 131 வால் மான்களில் இருந்து ரத்த மாதிரியை சேகரித்தனர்.. அவற்றை ஆய்வும் செய்தனர்.. அதில், 19 மான்களில் கொரோனாவால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது... மூக்கு சளி மாதிரி எடுக்கப்பட்ட 68 மான்களில் 7 மான்களின் மூக்கில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

வெள்ளை நிற மான்கள்
இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த மான்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது, வெள்ளை நிற மான்கள் சிலவற்றில் ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது... மாதிரி எடுக்கப்பட்ட வெள்ளை நிற மான்களில் 80 சதவீத விலங்குகளில் ஒமைக்ரான் இருந்துள்ளது... இந்த மான்கள் நியூயார்க்கில் ஸ்டேடன் தீவில் வாழ்ந்து வருகின்றனவாம்..

அதிர்ச்சி
தீவுக்குள் எப்படி சுதந்திரமாக வாழ்ந்து வரும்போது தொற்று பரவியிருக்கும் என்பது வியப்பாக உள்ளதாம்.. உயிரினங்களில் இப்படி ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்... காரணம், நியூயார்க்கில் மனிதர்களிடம்தான் இந்த ஒமிக்ரான் அறிகுறி தென்பட்டது.. இப்போது மனிதர்களிடம் இருந்து மான்களுக்கும் பரவி உள்ளது தெரியவந்துள்ளது..

நோய் எதிர்ப்பு சக்தி
சில மான்களில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால், மனிதர்களை போலவே இந்த மான்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பது தெரிய வந்துள்ளது. மான்களிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுவது தொடர்பாக இதுவரை உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை என்றாலும், இந்த ஆய்வு அடுத்தக்கட்ட முயற்சியிலும் விஞ்ஞானிகளை ஈடுபட வைத்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications