"வைச்சான் பாருங்க ஆப்பு!" இவ்வளவு பேசும் எலான் மஸ்க் கூட அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்தவர் தானாம்

Subscribe to Oneindia Tamil

வஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் இந்த முறை டிரம்ப் ஆதரவு நிலைப்பாட்டை எலான் மஸ்க்ல் எடுத்துள்ளார். புலம் பெயர்ந்தவர்களை கிரிமினல்கள் என சொல்லும் டிரம்பை தான் எலான் மஸ்க் ஆதரிக்கிறார். எலான் மஸ்க் கூட புலம்பெயர்ந்தோருக்கு எதிராகச் சமீப காலங்களில் காட்டமான கருத்துகளைக் கூறி வருகிறார். ஆனால், இவ்வளவு பேசும் எலான் மஸ்க் கூட அமெரிக்காவில் தொடக்கத்தில் சட்ட விரோதமாகவே வேலை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இன்னும் ஒரு வாரத்தில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்த முறை பல தொழிலதிபர்கள் கமலா ஹாரிஸ் நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர்.

elon musk us world

எலான் மஸ்க்: அதேநேரம் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், டிரம்ப் ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளார். சர்ச்சைக்குப் பெயர் போன டிரம்ப், புலம் பெயர்ந்தோரை கிரிமினல்கள் என அழைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோல எலான் மஸ்க் கூட புலம்பெயர்ந்தவர்கள் குறித்து அவ்வப்போது விமர்சித்து வருகிறார். ஆனால், இந்த எலான் மஸ்க் கூட அமெரிக்காவில் தொடக்கத்தில் சட்ட விரோதமாகவே வேலை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றே நம்மில் பலரும் நினைப்போம். ஆனால், உண்மையில் அவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். 1990களில் தான் அமெரிக்காவுக்கு வந்தார். அப்போது தொடக்கத்தில் இவர் உரிய பெர்மிட் இல்லாமல் அமெரிக்காவில் வேலை செய்தார் என்பதே இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டாகும். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பி இருக்கிறது.

புகார் என்ன: 1971ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா என்ற ஊரில் பிறந்த எலான் மஸ்க், பள்ளி படிப்பை அங்கேயே முடித்தார். அதைத் தொடர்ந்து கனடாவில் சில காலம் படித்த அவர், பிறகு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்தார். இருப்பினும், 1995ல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து ட்ராப் அவுட் ஆன எலான் மஸ்க், தனது முதல் நிறுவனமான ஜிப் 2இல் சுமார் நான்கு ஆண்டுகள் வேலை செய்தார்.

அதன் பிறகு அந்த நிறுவனத்தை சுமார் 300 மில்லியன் டாலர்களுக்கு அவர் விற்றிருந்தார். நான்கு ஆண்டுகள் அவர் வேலை செய்ததே இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. உரிய ஒர்க் பெர்மிட் இல்லாமல் அந்தக் காலகட்டத்தில் எலான் மஸ்க் வேலை செய்தார் என்பதே அவர் மீதான புகாராகும். எலான் மஸ்க்கிற்கு 1997ஆம் ஆண்டில் தான் ஒர்க் பெர்மிட் கிடைத்ததாக அந்தக் காலகட்டத்தில் அவருடன் வேலை செய்த ஊழியர்கள் கூறியுள்ளனர். அதாவது 2 ஆண்டுகள் அவர் உரிய பெர்மிட் இல்லாமல் அமெரிக்காவில் வேலை செய்துள்ளார்.

சட்ட வல்லுநர்கள்: அதாவது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் வெளிநாட்டு மாணவராகவே அப்போது அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார். மாணவர் விசா மட்டுமே அப்போது வழங்கப்பட்டு இருக்கும். கல்லூரியில் படிக்க மட்டுமே அந்த விசா செல்லுபடியாகும். அதை வைத்துக் கொண்டு வேலை செய்யவும் கூடாது நிறுவனத்தைத் தொங்கவும் கூடாது. மாணவர் விசா பெறுவோர், அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி தங்குவது தாண்டி தங்குவது பொதுவானதாக ஆகிவிட்டது. ஆனாலும், அது சட்டவிரோதமானது தான் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

எலான் மஸ்க் அடடே விளக்கம்: அதேநேரம் எலான் மஸ்க் தான் எந்த விதிமீறலையும் செய்யவில்லை என்றே கூறி வருகிறார். இது சட்டப்பூர்வமாகத் தவறு இல்லை என்றும் மாணவரில் இருந்து ஒரு தொழிலதிபராக மாற குறிப்பிட்ட டைம் எடுக்கும் என்றும் அது தொடர்பாகச் சட்டத்தில் தெளிவான விதிகள் இல்லை என்பதால் தான் செய்தது தவறு இல்லை என்றே அவர் கூறி வருகிறார். மேலும், தான் ஒரு மாணவராக மட்டுமே வேலை செய்ததாகக் கூட எலான் மஸ்க் வித்தியாசமான விளக்கத்தை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+