இது தான் அதிர்ஷ்டம்.. வாங்கிய 3 லாட்டரிக்கும் பரிசு.. ஒரேநாளில் ரூ1.22 கோடிக்கு சொந்தக்காரரான தாத்தா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் 3 லாட்டரி சீட்டுக்களை வாங்கிய முதியவர் ஒருவருக்கு 3 லாட்டரி சீட்டுக்களுக்கும் பரிசு விழுந்து அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிகிட்டு கொடுக்கும் என்ற ஒரு பேச்சு வழக்கு நம்ம ஊரில் உண்டு.

இப்படி அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு அவ்வப்போது நிஜ வாழ்விலும் இப்படியெல்லாம் நடந்து விடும் என்பதை சமீப காலமாக வெளியாகும் செய்திகள் நிரூபித்து வருகின்றன.

ஒரே நாளில் கோடிஸ்வரர்

ஒரே நாளில் கோடிஸ்வரர்

அதிலும் லாட்டரி பரிசு மூலமாக ஒரே நாளில் கோடிஸ்வராகி பலரையும் பொறாமையில் ஆழ்த்தி விடுகிறார்கள். அண்மையில் கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடியை வென்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பிரபலம் ஆனார். இப்படித்தான் அமெரிக்காவிலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன் விவரத்தை காணலாம். அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தை சேர்ந்த 67-வயது முதியவர்(பெயரை வெளியிட மறுத்துவிட்டார்) ஒருவர் லாட்டரி சீட்டை பிற்பகல் சமயத்தில் வாங்கி இருக்கிறார்.

3 லாட்டரி சீட்டுகள்

3 லாட்டரி சீட்டுகள்

ஆனால், முன்பு வாங்கியது நினைவு இல்லாமல் மற்றொரு சீட்டையும் அந்த முதியவர் வாங்கிவிட்டார். இதற்கு மத்தியில் அவருடைய மனைவியும் கணவர் 2 லாட்டரி சீட்டுக்களை வாங்கியதை அறியாமல் அவரும் ஒரு சீட்டை வாங்கி விட்டார். இப்படி மொத்தமாக 3 லாட்டரி சீட்டுகளை முதியவர் வாங்கியிருக்கிறார். அந்த முதியவர் பண கஷ்டத்தில் இருந்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் அவரது மனைவியும் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியது முதியவருக்கு கோபத்தை தான் ஏற்படுத்தியட்து.

 சிறிய ஏக்கத்துடன்

சிறிய ஏக்கத்துடன்

சூரிய வம்சம் படத்தில் தேவையானியும், சரத்குமாரும் அரிசி மற்றும் உணவு பொருட்கள் வாங்க சென்றுவிட்டு புது துணிகள் வாங்கி வருவர். அதேபோல் முதியவரின் மனைவி ஏதும் அதிர்ஷ்டம் அடிக்காதா.. என்ற சிறிய ஏக்கத்துடன் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். ஒன்று வாங்கினாலே பரிசு கிடைக்குமோ என்ற அச்சத்திலும், காசை கொடுத்து ஏமாந்துடுவோமே எனவும்.. பலரும் புலம்பிக் கொண்டு இருப்பதை பார்திருக்கக் கூடும். அதேபோல், தான் இவரும் இதே மனநிலையில் இருந்தாராம்.

3 லாட்டரிக்கும் பரிசு

3 லாட்டரிக்கும் பரிசு

ஆனாலும் தனது மனைவியின் பிறந்த தேதி வரிசையை கொண்டு வாங்கப்பட்டவையாக லாட்டரிகள் இருந்ததால் பரிசுகள் விழும் என்ற ஆசையிலும் இருந்து இருக்கிறார். அதேபோல இவரது நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தது. எதோ ஒரு லாட்டரி சீட்டுக்கு மட்டும் பரிசு விழவில்லை.. அவர் வாங்கிய 3 லாட்டரி சீட்டுக்களுக்கும் பரிசு விழுந்துவிட்டது. இதனால், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த முதியவர் தன்னால் நம்பவே முடியவில்லை எனக்கூறி வருகிறார்.

இணையத்தில் டிரெண்ட்

இணையத்தில் டிரெண்ட்

மொத்தமாக இந்த தம்பதிக்கு 1,50,000 டாலர் பரிசுத்தொகை விழுந்து இருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 22 லட்சத்து 82 ஆயிரத்து 30 ஆகும். உடல் நலனில் சிறு பிரச்சினைகள் இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், இப்போது கிடைத்திருக்கும் இந்த பரிசுத்தொகை மருத்துவ செலவுக்கு பயன்படும் என்று மகிழ்ச்சியாக கூறி வருகிறார் முதியவர். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிவருகிறது. ஒரு லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுவது அதிர்ஷ்டம் என்றால் அவர் வாங்கிய 3 லாட்டரி சீட்டுக்களுக்கு பரிசு விழுந்துள்ளதற்கு என்ன பெயர் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+