12 படங்களை பார்த்தால் போதும்.. ரூ.1.6 லட்சத்தை அள்ளி கொடுக்கும் பிரபல நிறுவனம்! இது நல்லா இருக்கே
வாஷிங்டன்: 12 படங்களைப் பார்ப்போருக்கு 1.60 லட்ச ரூபாயை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.. வேலைக்காக இங்கே இளைஞர்கள் முட்டி மோதும் நிலையில், இந்த அறிவிப்பை நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நமது நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. அதிலும் ப்யூன் போன்ற அரசு வேலைகளும் முனைவர் பட்டம் பெற்றவர்களும் கூட விண்ணப்பிக்கும் நிலையே இருக்கிறது. வெறும் சில நூறு பணியிடத்திற்குப் பல லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கிறார்கள்.

அதிலும் இப்போது சர்வதேச அளவில் பொருளாதார சிக்கல் நிலவி வரும் நிலையில், இப்போது அனைவரும் வேலைக்கு முட்டி மோதும் நிலையே இருக்கிறது. இந்தியாவில் ஐடி நிறுவனங்களே கூட ஆள் எடுக்க யோசிக்கிறார்கள்.
1.6 லட்சம்: அப்படியொரு சூழலே நமது நாட்டில் நிலவி வருகிறது. அதேநேரம் இப்போது இணையத்தில் ஒரு அறிவிப்பு டிரெண்டாகி வருகிறது. அதாவது அமெரிக்க நிறுவனம் ஒன்று, வெறும் 12 படங்களைப் பார்க்கவே பல லட்சம் சம்பளத்தைக் கொட்டி கொடுக்கிறதாம். அதுவும் ஏதோ 10, 100 எல்லாம் இல்லை. 1.6 லட்ச ரூபாயை கொடுக்கிறது. அது எப்படி எனக் கேட்கிறீர்களா.. வாங்க விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூம்சிபாக்ஸ் (BloomsyBox) என்ற நிறுவனம் தான் இதற்காக வேலைக்கு ஆட்களை எடுக்கிறது. அதன்படி12 கிறிஸ்துமஸ் படங்களைப் பார்ப்போருக்கு $2,000 டாலர் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படுவோர் அந்த 12 படங்களைப் பார்த்துவிட்டு அது குறித்த தங்கள் கருத்துகளை இன்ஸ்டாகிராமில் பகிர வேண்டும் என்பதே விதியாகும்.
12 படங்கள்: பண்டிகை காலத்தில் இந்த படத்தைப் பார்க்கலாமா, குழந்தைகளுடன் பார்க்கச் சரியான படமாக, அதில் ரொமான்ஸ் எப்படி இருக்கிறது எனப் பல விஷயங்களை ஆய்வு செய்து விமர்சனம் எழுத வேண்டும். இப்படி 12 படங்களைப் பார்த்து ரிவ்யூ போடுவோருக்கு 1.6 லட்ச ரூபாய் பணத்தை அந்த நிறுவனம் வழங்க உள்ளது. பணம் மட்டுமின்றி, ஹாட் கோகோ, அங்குள்ள பிரபல ஒடிடி தளமான பீக்காக் தளத்திற்கு ஒரு வருடச் சந்தா, அடுத்த 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக மலர்கள் ஆகியவை வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமெரிக்க நிறுவனம் மேலும் கூறுகையில், "இந்தப் படத்தைப் பார்க்கலாமா வேண்டாமா எனப் பொதுமக்களுக்குப் பரிந்துரைக்கும் வகையில் ஒரு சிறப்பான ரேட்டிங் முறையை உருவாக்கியுள்ளோம்.. கிறிஸ்துமஸ் நேரத்தில் பார்க்கக் கூடிய சரியான படம் என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை உருவாக்கியுள்ளோம்.. இதில் தேர்வு செய்வோருக்கு நாங்கள் $2,000 தரவுள்ளோம். இது தவிர ஒடிடி தந்கா உள்ளிட்டவற்றையும் இலவசமாகத் தரவுள்ளோம்" என்றார்.
கிறிஸ்துமஸ்: அமெரிக்காவைப் பொறுத்தவரைக் கிறிஸ்துமஸ் என்பது ரொம்பவே முக்கியமான விடுமுறை தினமாகும். கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை கொண்டாட்டமாகவே செல்லும். இதனால் அந்த விடுமுறை நாட்களில் மிகப் பெரியளவில் பொதுமக்கள் செலவும் செய்வார்கள். இதன் காரணமாகவே இதுபோன்ற நிறுவனங்கள் பல திட்டங்களை நிறுவனங்கள் கொண்டு வரும். அதன்படி தான் இந்த அமெரிக்க நிறுவனம் 12 படங்களைப் பார்த்து ரிவ்யூ செய்ய அந்த அமெரிக்க நிறுவனம் இந்தளவுக்குப் பெரிய தொகையைக் கொடுக்கிறது.












Click it and Unblock the Notifications