அமெரிக்காவில் கிராமிய விருது வழங்கும் விழா.. காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் அசத்திய அனெட்.. யார் இவர்?
அமெரிக்காவில் கிராமிய விருது வழங்கும் விழாவில் காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் ஜொலித்த இசை கலைஞர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த கிராமிய விருது வழங்கும் விழாவில் இந்திய பெண் ஒருவர் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அமெரிக்காவில் உள்ள பெர்க்லீ இசைக் கல்லூரியின் நிறுவனர் அனெட் பிலிப். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவரின் பெர்க்லீ இந்தியன் குழுமம், ஷுருஆத் என்ற தலைப்பில் ஆல்பம் ஒன்றை உருவாக்கியது.
உலகளாவிய சிறந்த இந்த ஆல்பம் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தனது குழுவினருடன் அனட் பிலிப் சென்றிருந்தார்.

சிவப்பு நிறத்தில் புடவை
அப்போது அவர சிவப்பு நிறத்தில் தங்க நிற ஜரிகை போடப்பட்டிருந்த காஞ்சிபுரம் பட்டுச் சேலையையும் தென்னிந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நகைகளையும் அணிந்திருந்தார். தனது நாட்டையும் தனது கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ஆடை, அணிகலன்களை அணிவதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

98 பேர்
அனெட் பிலிப்பின் ஆல்பத்தில் ஷங்கர் மகாதேவன், உஸ்தாத் ஜாகிர் உசேன், ஸ்ரேயா கோஷல், விஜய் பிரகாஷ் உள்ளிட்ட 98 பேர் பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புடவை இந்திய நெசவாளர்களால் உருவாக்கப்பட்டது என அனட் பிலிப் தெரிவித்தார். இந்த விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. அனெட்டிற்கு ரெட் கார்பெட் விரிக்கப்பட்டது. எனது நாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புடவை அணிவது குறித்து நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என அனெட் கூறியிருந்தார்.

கிராமிய விருது
அமெரிக்காவில் பிறந்து கர்நாடகாவில் வசித்து வரும் ரிக்கி கேஜ் தனது டிவைன் டைடஸ் எனும் இந்திய இசை ஆல்பத்திற்காக கிராமி விருதை வென்றுள்ளார். ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். ஹாரி ஸ்டைல்ஸின் ஹாரிஸ் ஹவுஸ் சென்ற ஆண்டின் சிறந்த ஆல்பமாக கருதப்பட்டது. சிறந்த பாப் குரல் ஆல்பம் விருதையும் வென்றது. லிசோவின் அபௌட் தட் டைம் இந்த ஆண்டின் சாதனை ஆல்பம் விருதையும் வென்றது.

32 விருதுகள்
மொத்தம் 32 கிராமி விருதுகளை வென்று அதிக முறை கிராமி விருதுகளை வென்ற நபர் எனும் சாதனையை பெயான்ஸ் படைத்துள்ளார். இந்த ஆண்டின் சாதனை ஆல்பமாக லிசோவின் அபௌட் டேம் டைம் விருது வென்றுள்ளது. இந்த ஆண்டின் பாடல் போனி ரெய்ட்டின் ஜஸ்ட் லைக் தட், சிறந்த ராப் ஆல்பம் கெண்ட்ரிக் லேமரின் மிஸ்டர் மொரேல் அண்ட் தி பிக் ஸ்டெப்பர்ஸ் விருதை பெற்றது. சிறந்த இரட்டை பாப் பாடகர்கள் அல்லது முழு பெர்ஃபாமன்ஸ் அன்ஹோலி ஆல்பத்திற்காக சாம் ஸ்மித் மற்றும் கிம் பெட்ராஸ் ஆகியோருக்கு விருது கிடைத்துள்ளது.

அனெட் அணிந்த புடவை
இந்த விருது வழங்கும் விழாவில் அனெட் அணிந்திருந்த பட்டுப் புடவை அனைவரின் கண்களையும் பறித்தது. சிவப்பு நிறத்தில் ஜாக்கெட் அணிந்திருந்தார். அத்துடன் அவரது சேலை முழுவதும் தங்க நிற ஜரிகையால் செய்யப்பட்டிருந்தது. அதற்கு மேட்சிங்காக நகைகளையும் அணிந்திருந்தார். பட்டு என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது காஞ்சி பட்டுதான். ஆரணி பட்டு, பனாரஸ் பட்டு, மைசூர் சில்க், கொன்ராட் சில்க், போச்சம்பள்ளி பட்டு, செட்டிநாடு சில்க் சேலைகள், கட்வல் பட்டு என பல வெரைட்டிகள் உள்ளன.

காஞ்சி பட்டு
இதில் பெரிதும் காஞ்சிபுரம் பட்டும் ஆரணி பட்டும் மக்களை கவர்ந்துள்ளன. இந்த பட்டுப் புடவைகளை வாங்க பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்து வாங்குகிறார்கள். இந்த புடவைகள் பல்வேறு மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றாலும் காஞ்சிபுரத்தில் நேரில் வந்து நெய்பவர்களிடமே வாங்குவதால் விலை சற்று குறைவாக இருக்கிறது. இதிலும் சிலர் போலி ஜரிகைகளை கலந்து பட்டு என விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் ஜரிகையின் எடையை பார்த்து ஒரிஜினலை கண்டறியலாம் என்கிறாார்கள். இந்த புடவையின் வெயிட் அதிகமாக இருக்கும். சேலையின் ஓரத்தில் போடப்படும் சுங்குகள் சீராக இருக்கும். ஜரிகையே இல்லாவிட்டாலும் 5000 ரூபாய்க்கு கீழ் பட்டு புடவை கிடைக்காது. தற்போது பட்டுப் புடவைகள் குறைந்தது 5000 முதல் லட்ச ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளது. இதில் சுத்தமான தங்கம், வெள்ளி இழைகளை கொண்டு அவரவர் வசதிகக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications