டிரம்ப் & எலான் மஸ்கிற்கு எதிராக வெடிக்கும் போராட்டம்.. அமெரிக்கா முழுக்க திரண்ட மக்கள்.. பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு எதிராக அங்கு நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. டிரம்பின் கொள்கைகள் மன்னரைப் போல இருப்பதாகவும் இதை அனுமதிக்க முடியாது என்று கூறி, நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக ஒரு மாதத்திற்கு முன்பு பதவியேற்ற டிரம்ப், பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அமெரிக்காவின் நலன்களைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக அவர் கூறுகிறார்.

Donald Trump Elon Musk America

பெரியளவில் போராட்டம்

ஆனால், அவரது பல உத்தரவுகள் சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது. இத்தனை காலம் டிரம்பின் உத்தரவுகளுக்கு வெளிநாடுகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இப்போது அமெரிக்காவிலேயே மிகப் பெரியளவில் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று திங்கள்கிழமை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு எதிராகப் பெரியளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மன்னர்களுக்கு இடமில்லை

அமெரிக்காவில் இப்போது கடும் குளிர் நிலவும் நிலையில் அதையும் தாண்டி நாடு முழுக்க பல நகரங்களில் போராட்டக்காரர்கள் திரண்டனர். "அதிபர் காலங்களில் மன்னர்களுக்கு இடமில்லை" என்று கோஷமிட்டு போராட்டங்களை நடத்தினர். அரிசோனா, புளோரிடா மற்றும் கலிபோர்னியா எனப் பல மாகாணங்களில் போராட்டங்களில் பல நூறு பேர் பங்கேற்றனர். இந்த "நோ கிங்ஸ்" போராட்டங்களை 50501 என்ற இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த இரு வாரங்களில் இரண்டாவது முறையாக இந்த அமைப்பினர் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

முன்னதாக கடந்த பிப்ரவரி 5ம் தேதி தான் அதிபர் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு எதிராக இந்த அமைப்பினர் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியிருந்தனர். எலான் மஸ்கின் டாஜ் துறை அமெரிக்காவின் பெடரல் பணியிடங்களைக் குறைக்க முடிவு செய்திருந்த நிலையில், அதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையே இப்போது டிரம்பின் நடவடிக்கைகள் சர்வாதிகாரியைப் போல இருப்பதாகச் சொல்லி 50501 அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டத்தை ஒருங்கிணைத்தது யார்

இதனை 50501 (fifty fifty-one) என்ற குழு தான் நடத்தியுள்ளது. டிரம்ப் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக நாடு முழுக்க அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கும் ஒன்றிணைப்பதையே இந்த குழு நோக்கமாக வைத்துள்ளது.. 50 போராட்டங்கள், 50 மாகாணங்கள், ஒரே நாள் என்பதைக் குறிக்கும் வகையிலேயே இதற்கு 50501 என்று பெயரிட்டுள்ளனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் டிரம்பிற்கு இணையாகப் போராட்டங்களில் எலான் மஸ்கிற்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன. டிரம்பிற்கு பிரச்சாரத்தின் போது பெரியளவில் உதவியாக இருந்த எலான் மஸ்க்கை அரசின் செயல்திறனை அதிகரிக்கும் டாஜ் பிரிவின் தலைவராக டிரம்ப் நியமித்திருந்தார். டாஜ் துறையில் பெடரல் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வது உள்ளிட்ட முடிவுகள் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், எலான் மஸ்க்கிற்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்துள்ளன. மக்கள் யாரும் எலான் மஸ்க்கை தேர்வு செய்யவில்லை என்ற கோஷத்துடன் போராட்டங்கள் நடந்தன.

நாடு முழுக்க போராட்டம்

பொதுமக்கள் பலரும் அமெரிக்காவின் தேசிய கொடிகளைக் கையில் ஏந்தியபடி போராட்டங்களில் பங்கேற்றனர். வாஷிங்டன், அரிசோனா, புளோரிடா, கலிபோர்னியா, பாஸ்டன், சியாட்டில், ஒர்லாண்டோ என நாடு முழுக்க போராட்டங்கள் நடந்தன. அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்கிற்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன. அடுத்தடுத்து நடக்கும் இந்த போராட்டங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+