I Phone 16: ஐபோன் பிரியர்கள் காத்திருந்த நாள்.. இன்று ஆப்பிள் நிகழ்ச்சி.. என்ன அப்டேட் இருக்கும்?
வாஷிங்டன்: ஆப்பிள் ஐபோன் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் நிகழ்வான ஆப்பிள் குளோடைம் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஐபோன் 16 சீரிஸ்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவற்றில் என்னென்ன அப்டேட்கள் இருக்கலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
மொபைல் போன் உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் நிறுவனம் ஆப்பிள். தனது தனித்துவமான தயாரிப்புகள் மூலம் செல்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்பிள் ஐபோன் நிறுவனம் ஆண்டு தோறும் நிகழ்ச்சியை நடத்தி தனது புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவது வழக்கம்.

ஐபோன் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் நிகழ்வாக இந்த நிகழ்ச்சி இருக்கும். ஒவ்வொரு ஆண்டிலும் செப்டம்பர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான குளோ டைம் நிகழ்வு இன்று (செப்டம்பர் 9 ஆம் தேதி) நடைபெறுகிறது. இன்றைய நிகழ்ச்சியை தனது ஐபோன் சீரிஸ்களில் ஐபோன் 16 மாடல்கள் அறிமுகப்படுத்துகிறது.
என்னென்ன அப்டேட்கள்: இந்த ஐபோன் 16 மாடலில் என்ன அப்டேட்கள் இருக்கும் என்பதை பார்க்கும் முன்பு இந்த நிகழ்ச்சியை எங்கு எப்படி பார்க்கலாம் என்பது பற்றி இங்கே பார்ப்போம். ஆப்பிள் குளோடைம் ஸ்பெஷல் நிகழ்ச்சி கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் குபெர்டினோ பார்க்கில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.
4 மாடல்கள்: இன்றைய நிகழ்ச்சியில் ஐபோன் 16 சீரிஸ்களில் நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோல், மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல, ஆப்பிள் வாட்ச் X, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மற்றும் ஆப்பிள் வாட்ச் SE 3 ஆகிய நான்கு ஸ்மார்ட்வாட்ச்களும் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏர்பட்ஸ்: புதிய ஏர்பாட்ஸ் ஒன்றும் இன்று வெளியாகிறது. கூடுதலாக சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ஒன்றும் வெளியாகலாம் எனத் தெரிகிறது. ஐபோன் 16 சீரீஸ் போன்களுக்கனான pre-order- இன்று இரவே தொடங்க உள்ளது. ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸில் பெரிய ஸ்க்ரீன்கள் அதாவது 6.3 இன்ச், 6.9 இன்ச்கள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய மாடல் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் கொண்டதாக உள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலில் 48 எம்பி அல்ட்ரா வொய்ட் கேமரா இடம் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது. 2024 ஐபோன் மாடல்கள் பெரிய அளவிலான விலை உயர்வை சந்திக்காது என்று கூறப்படுகிறது.
விலை எவ்வளவு?: ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 15 ப்ரோவின் விலையை ரூ.5,000 ஆகவும், ப்ரோ மேக்ஸின் விலையை ரூ.20,000 ஆகவும் உயர்த்தியதால், ஐபோன் 16 சீரீஸின் கீழ் வரும் மாடல்களில் பெரிய அளவிலான விலை உயர்வு இருக்காது என்று கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், ஆப்பிள் ஐபோன் 15 மாடலை போலவே ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.80,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications