ஆப்பிள் ஐபோன் சேவைகள் திடீர் முடக்கம்.. அமெரிக்கா உள்பட பல நாடுகளில் வாடிக்கையாளர்கள் அவதி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் ஆப்பிள் ஐபோனில் ஐகிளவுட், தி ஆப்பிள் ஸ்டோர், ஆப்பிள் பே உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆப்பிள் பயனாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

apple Iphone

உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோனை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் திடீரென்று நேற்று ஆப்பிள் ஐபோனில் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஐகிளவுட், தி ஆப்பிள் ஸ்டோர், ஆப்பிள் பே உள்ளிட்டவற்றின் சர்வீஸ்கள் பாதிக்கப்பட்டன.

அமெரிக்கா, பிரேசில், கிரீஸ், லத்வியா உள்பட பல நாடுகளில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நேற்று காலை 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி இரவு 10 மணி) இந்த பிரச்சனையை வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ள தொடங்கினர். இதனை Downdetector எனும் தொழில்நுட்ப குறைபாட்டை டிராக் செய்யும் பிளாட்பார்ம் உறுதி செய்துள்ளது.

அந்த பிளாட்பார்ம் தகவலின்படி ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கிளவுட் சர்வீசஸ் மற்றும் புதிய டிவைஸ்ஸை ஆக்டிவேட் செய்வதில் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி ாப்பிள் வாலட், ஆப்பிள் மியூசிக் உள்ளிட்ட சேவைகளை பெறுவதில் சிலர் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''இன்று காலையில் (அமெரிக்க நேரப்படி நேற்று காலை)ஆப்பிள் சாப்ட்வேர் அப்டேட்டால் சில சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் பல சர்வீஸ்களில் இடையூறு ஏற்பட்டது. தற்போது அதில் பல சேவைகள் மீண்டும் இயங்க தொடங்கின. மீதமுள்ள சேவைகளையும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம்'' என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

இதுதவிர அமெரிக்காவில் இன்னும் பல நிறுவனங்களில் இணையதள சேவைகள், தகவல் தொடர்புகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்காவில் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. இதுதவிர ஜும் எச்எஸ்பிசி, சிஎன்என், சேல்ஸ்ஃபோர்ஸ், ஐகேஇஏ உள்பட 178 நிறுவனங்களின் இணையதளங்களும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு அமெரிக்கா விமான நிலையங்களில் விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாட்டு அமைப்பின் தகவல் தொடர்பில் குளறுபடி ஏற்பட்டது. இப்போது மீண்டும் பல்வேறு நிறுவனங்களின் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏதேனும் சைபர் தாக்குதல் நடத்தப்படுகிறதா? என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+