Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா..! ரூ 2.97 கோடிக்கு ஏலம் போன ஆப்பிளின் முதல் கம்ப்யூட்டர்.. ஏன் அவ்வளவு மவுசு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 1976ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனர்கள் ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் இணைந்து உருவாக்கிய முதல் ஆப்பிள் கணினிகளில் ஒன்று அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் $400,000க்கு (இந்திய மதிப்பில் ரூ 2.97 கோடி) விற்பனையாகியுள்ளது.

ஒவ்வொரு துறையிலும் ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ தான் முக்கிய புரட்சியைச் செய்வார்கள். அப்படி கணினித் துறையில் மிக முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்த நிறுவனம் என்றால் அது ஆப்பிள் தான்.

அந்த காலகட்டத்தில் பல்கலைக்கழகங்களிலும் பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே இருந்த கணினிகளை அனைத்து தரப்பினரும் உருவாக்கும் வகையில் மாற்றியதில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது.

ஆப்பிள் 1 கணினி

ஆப்பிள் 1 கணினி

முதலில் வெறும் ப்ரோகிராம்கள் (Computer programs) தெரிந்தவர்களால் மட்டுமே கணினிகளை இயக்க முடியும் என்ற நிலை இருந்தது. அப்போது ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ஆப்பிள் நிறுவனம் தான் அனைத்து தரப்பு மக்களும் எளிதில் பயன்படுத்தும் வகையிலான கணினிகளை உருவாக்கியது. 1976ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதலில் வெளியிட்ட ஆப்பிள் 1 கணினி மிகவும் பெரிய ஹிட் அடித்தது.

அரிதான ஆப்பிள் 1 கணினி

அரிதான ஆப்பிள் 1 கணினி

இந்நிலையில், ஆப்பிள் 1 கணினிகளில் ஒன்று தற்போது அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. மிகவும் அரிதான இந்த ஹவாய் கோவா மரத்தால் செய்யப்பட்ட ஆப்பிள்-1 இன்னும் கூட செயல்படுகிறது. 1976இல் வெளியான 200 ஆப்பிள்-1 கணினிகளில் இதுவும் ஒன்று. தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த கணினியை இதுவரை இரண்டு பேர் மட்டுமே வைத்துள்ளனர். முதலில் இந்த கணினி கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் இருந்துள்ளது.

அப்போது வெறும் 650 டாலர்

அப்போது வெறும் 650 டாலர்

அதை அவர் தனது மாணவர்களில் ஒருவருக்கு 650 டாலருக்கு விற்றுள்ளார். இந்த கணினியுடன் இரண்டு கேசட் டேப்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பயனர் கையேடுகள் மற்றும் ஆப்பிள் மென்பொருள் ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஏலத்திற்கு முன் ஆப்பிள் -1 நிபுணர் கோரி கோஹன் கூறுகையில், "இது விண்டேஜ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி தொழில்நுட்ப காதலர்களின் சொர்க்கம். இந்த கணினி மிகவும் உற்சாகம் தரும் பொருட்களில் ஒன்று என்பதில் சந்தேகம் வேண்டாம்" என்றார்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்


ஸ்டீவ் ஜாப்ஸ், வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகி மூவரும் சேர்ந்த கலிபோர்னியாவில் 1 ஏப்ரல் 1976 அன்று ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினர். ஆப்பிள் 1 கணினியைத் தயாரிக்கும் செலவுகளுக்காக ஜாப்ஸ் தனது VW மைக்ரோபஸ்ஸ் வானகத்தையும் வோஸ்னியாக் தனது HP-65 கால்குலேட்டரை $500க்கு விற்றனர். அதன் பிறகு உருவாக்கப்பட்ட ஆப்பிள் 1 கணினி 1976ஆம் ஆண்டில் $666.66 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

20 கணினிகள் மட்டுமே

20 கணினிகள் மட்டுமே

தற்போது உலகில் மொத்தம் 20 ஆப்பிள் 1 கணினிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த 20 கணினிகளில் ஒன்று தான் தற்போது $400,000க்கு (இந்திய மதிப்பில் ரூ 2.97 கோடி) ஏலம் போனது. இருப்பினும், ஏலம் விடப்பட்ட ஆப்பிள் 1 கணினிகளில் அதிக விலைக்கு விற்பனையானது இது இல்லை. கடந்த 2014 இல் நியூயார்க்கில் நடந்த Bonhams ஏலத்தில் ஆப்பிள் 1 கணினி ஒன்று 905,000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதே சாதனையாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+