மாப்பிள்ளை இவருதான்.. ஆனா சட்டை என்னோடது! ஆப்பிளுக்கு.. டிஸ்பிளே சப்ளை செய்யும் சாம்சங்!
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் iPhone Duo என்கிற மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட இந்த செல்போன் மக்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த போனுக்கான டிஸ்பிளேவை தயாரிக்கும் வேலையை சாம்சங் கையில் எடுத்திருக்கிறது. இந்த டிஸ்பிளேவின் தயாரிப்பு விலை மட்டும் ரூ.21,000 என்பது குறிப்பிடத்தக்கது.
iPhone Duo போன் மற்றும் இதன் அடுத்தடுத்த மாடல்களுக்கு தேவையான மடிக்கக்கூடிய ஓஎல்இடி டிஸ்பிளேக்களை சாம்சங் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பிரத்யேகமாக சப்ளை செய்ய உள்ளது.

டிஸ்பிளே தயாரிப்பு
இந்த போனில் முக்கியமான விஷயமே டிஸ்பிளேதான். ஆப்பிள் நிறுவனம் வாங்கும் ஒவ்வொரு மடிக்கக்கூடிய டிஸ்பிளே பேனலுக்கும் சாம்சங் நிறுவனத்திற்கு சுமார் 21,000 செலுத்த வேண்டும். இது அந்த போனின் ஒட்டுமொத்த உற்பத்தி செலவில் மிக அதிகப்படியான தொகையாகும். சாதாரணமாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் போன்ற போன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்களுக்கு டிஸ்பிளே கட்டணமாக வெறும் ரூ.6,600 மட்டுமே கொடுத்து வந்த நிலையில் மடிக்கக்கூடிய டிஸ்பிளேவின் விலை அதைவிட பல மடங்கு அதிகமாகும்.
காஸ்ட்லி டிஸ்பிளே
அப்போ வெறும் ரூ.6,600 ஆனால் இப்போ ரூ.21,000 செலவழிக்க காரணம், மடிக்கக்கூடிய போன்களின் டிஸ்பிளே தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது என்பதுதான். பலமுறை மடித்து மடித்து பயன்படுத்தினாலும் அதன் பிரகாசம், நிறம், தரம் மற்றும் ஆயுட்காலம் குறையாதவாறு இது வடிவமைக்கப்பட வேண்டும். எனவே ஆப்பிள் போனுக்காக இந்த டிஸ்பிளேவில் சாம்சங்கின் அதிநவீன M16 OLED மெட்டீரியல் மற்றும் நானோ-டெக்ஸ்ட்சர் லேயர் உட்பட 10 அடுக்குகள் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தொழில்நுட்பம்
மேலும், மடிப்பு பகுதியை தாங்குவதற்காக அல்ட்ரா தின் கிளாஸ் (UTG) தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. மடிக்கக்கூடிய டிஸ்பிளே தயாரிப்பில் சாம்சங் நிறுவனம் பல வருடங்களாக முன்னணியில் உள்ளது. எனவேதான் சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் தேடி செல்கிறது.
ஆப்பிளின் மற்ற டிஸ்பிளே சப்ளையர்களான எல்ஜி, இன்னும் மடிக்கக்கூடிய டிஸ்பிளேக்களை தயாரிக்க தொடங்கவில்லை. சீனாவின் பிஓஇ(BOE) நிறுவனம் தயாரிக்கும் டிஸ்பிளேக்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு திருப்தி இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவேதான் சாம்சங்கை மட்டும் ஆப்பிள் பெரிய அளவுக்கு நம்பியிருக்கிறது.
பெரிய சிக்கல்
எல்லாம் ஓகேதான், ஆனால் இதில் இன்னும் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது iPhone Duo மொபைல் இந்தியாவில் ரூ.3 லட்சத்திற்கு விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் டிஸ்பிளே உடைந்துவிட்டால் அதை சரி செய்ய குறைந்தது ரூ.84,000 வரை செலவாகலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு விலை கொடுத்து டிஸ்பிளேவை மாற்றுவதற்கு, மற்ற பிராண்டில் இதே தரத்தில் உள்ள வேறு போன்களை வாங்கிக்கொள்ளலாம் என்றுதான் நெட்டிசன்கள் பலரும் கூறுகின்றனர்.
என்னதான் ஆப்பளின் iPhone Duo டாப் டக்கராக இருந்தாலும், ஷாவ்மி (Xiaomi) பிராண்டின் மடிக்கக்கூடிய போனின் டாப் எடிஷனின் விலையே ரூ.2.25 லட்சம்தான். ஆப்பிளுடன் ஒப்பிடுகையில் இதுவும் மாஸாகத்தான் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
