அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கிய 30 நிமிட வீடியோ

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 30 நிமிட பிரச்சார பாடலை உருவாக்கியுள்ளார். வரும் நவம்பர் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏ.ஆர். ரகுமானின் இந்த பிரச்சார பாடல், கமலாவுக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு புகழ் பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்கள். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.அமெரிக்கர்கள் மத்தியில் கமலா ஹாரிஸுக்கு டிரம்பைவிட அதிக ஆதரவு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ar rahman us presidential election 2024 kamala harris

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது. அவருக்கு பிரச்சாரத்தில் நிதி திரட்டுவது, வாக்காளர்களை ஈர்க்க நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக பிரச்சார பாடலை உருவாக்க உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானை AAPI என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.

தெற்காசிய மற்றும் இந்திய வாக்காளர்களை கவரும் பொருட்டு ஏ.ஆர்.ரகுமானை ஒப்பந்தம் செய்துள்ளது அந்த அமைப்பு. ஏ.ஆர்.ரகுமானும் அந்த அமைப்பு கேட்டபடி 30 நிமிட பிரச்சார பாடலை உருவாக்கியுள்ளார். இந்த 30 நிமிட பாடல் எப்படி இருக்கும் என்றால், ஏ.ஆர். ரகுமானின் புகழ் பெற்ற பாடல்கள் மற்றும் கமலா ஹாரிஸின் வேட்பு மனு தாக்கல், கமலா ஹாரிஸின் வாக்குறுதிகள் மற்றும் அமெரிக்கர்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் போன்றவை இடையிடையே காட்டப்படும்.

இந்த 30 நிமிட பிரச்சார இசை நிகழ்ச்சி API விக்டரி ஃபண்ட் அமைப்பின் யூயூடிப் சேனலில் வரும் அக்டோபர் 13 அன்று இரவு 8 மணிக்கு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. இதுபற்றி AAPI விக்டரி ஃபண்ட் யூடியூப்பில் ஒரு டீஸர் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் இந்தியாஸ்போரா நிறுவனர் எம் ஆர் ரங்கசாமி ஆகியோர் நிகழ்ச்சிக்கு தயாராவதாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+