ஏலியன்கள் இருப்பது உண்மையா? போட்டு உடைத்த நாசா.. மர்மம் விலகியதா? என்ன சொல்லியிருக்கு பாருங்க
வாஷிங்டன்: வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மையா? என்பது புரியாத புதிராகவே இன்று வரை நீடித்து வரும் நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா இன்று யுஎப்ஓ குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
பறக்கும் தட்டுக்களில் வேற்று கிரக வாசிகள் அவ்வப்போது பூமிக்கு வருவதாகவும் மனிதர்களுடன் மோதலில் ஈடுபடுவதாகவும் பல ஹாலிவுட் படங்களில் பார்த்து இருக்கிறோம். மேலும் வேற்று கிரக வாசிகள் குறித்து அவ்வப்போது வியக்கும் படியாக பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையில் மேலை நாடுகளில் சிலர் வேற்று கிரகவாசிகளை பார்த்தாக கூறி பரபரப்பை ஏற்படுத்துவதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாக உள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் வேற்று கிரகவாசிகள் வெறும் கட்டுக்கதையா? இல்லை உண்மையிலேயே இருக்கிறார்களா? என்று கண்டறிய ஒருபக்கம் ஆய்வை நடத்தி கொண்டுதான் இருக்கிறது. வேற்று கிரக வாசிகள் இருப்பதாக ஒரு தரப்பினர் சொல்லி வரும் நிலையில் மற்றொரு தரப்பினர் அதற்கு சான்ஸே இல்லை என்றும் கூறாமல் இல்லை.
இப்படி பிரபஞ்ச ரகசியமாக வேற்று கிரகவாசிகள் இருப்பு குறித்த விவாதமும் பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டே செல்கிறது. அதாவது, நம்மை போலவே வேறு கிரகத்திலும் கண்டிப்பாக ஏதேனும் உயிர்கள் வாழும் என்று ஒரு தரப்பினர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். ஆனால், இதையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் தான் அதற்கான சாத்தியமே இல்லை என்று சிலர் கூறும் தகவலாக இருக்கிறது.
இப்படியாக விவாதங்கள் நீண்ட காலமே சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பறக்கும் தட்டுக்கள்(UFO) குறித்த ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டு வரும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான (NASA) தனது கண்டுபிடிப்புகளை இன்று வெளியிட இருக்கிறது. பறக்கும் தட்டுக்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வரும் 16 பேர் கொண்ட சுதந்திரமான குழு தங்கள் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகளை கடந்த மே மாதம் வெளியிட்டு இருந்தது.
அதில், நம்மிடம் இருக்கும் டேட்டாக்கள் மற்றும் நேரில் பார்த்ததாக சொல்பவர்கள் அளிக்கும் தகவல் ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்யும் போது உறுதியான முடிவுக்கு வர போதுமானதாக இல்லை. மேலும் இது தொடர்பாக உயர் தர தரவுகளை சேகரிப்பது அவசியமாகிறது" என்று கூறியிருந்தது. இந்த நிலையில், ஏலியன்கள் அதாவது பறக்கும் தட்டுக்கள் குறித்த ஆய்வு பற்றிய அறிக்கையை நாசா வெளியிட்டுள்ளது. 33 பக்க அறிக்கைகளை ஏலியன்கள் பற்றிய ஆய்வு செய்து நாசாவின் சுதந்திரமான குழு வெளியிட்டு இருக்கிறது.
இந்த அறிக்கையின் படி, விவரிக்க முடியாத சூழல்களுக்கு பின்னால் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரக வாசிகள் உள்ளார்களா? என்பதை உறுதி செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அதற்கான சாத்தியக்கூறுகளையும் நிராகரித்து விட முடியாது என்று நாசா தெரிவித்துள்ளது.
அதேபோல், நாசா விஞ்ஞானி பில் நெல்சன் கூறுகையில், பிரபஞ்சத்தில் பூமியை போன்று வாழும் சூழலை கொண்ட கிரகத்தை நாசா கண்டறியும். யு.எப்.ஓக்கள் வேற்று கிரகவாசிகளுடையது என்று சொல்ல எந்த காரணமும் இல்லை"என்றார். யு.எப்.ஓ என்ற வார்த்தையை நாசா பயன்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடையாளம் தெரியாத அசாதாரண நிகழ்வுகள் (UAP) என்றே அழைக்கப்படும் நாசா தெரிவித்துள்ளது
இன்று வெளியிடப்பட்டு இருக்கும் நாசாவின் அறிக்கையில், திருப்பு முனையை ஏற்படுத்தும் விதமாக இருக்காது என அறிக்கை வெளியாகும் முன்பே சொல்லப்பட்டது. கிட்டதட்ட அதே போலத்தான் அறிக்கையின் முடிவும் வந்துள்ளது. எனினும், புதிய பணிக்கான ஒரு தொடக்கமாக இன்றைய அறிக்கை அமையலாம் என்றும் சொல்லப்படுகிறது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications