வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுழன்றடித்த சூறாவளி! கம்பீரமாக நின்ற ஆர்டெமிஸ் 1! பச்சைக் கொடி காட்டிய நாசா! நாளை விண்ணில் பாய்கிறது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் முதல் ராக்கெட் சோதனைக்கு நாசா பச்சைக்கொடி காட்டியுள்ளது.

நிலவுக்கு முதல்முறையாக மனிதர்களை அனுப்பிய அமெரிக்கா இப்போது மீண்டும் அதே முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. இதற்கான முதற்கட்ட சோதனைகள் இப்போது தொடங்கி உள்ளது.

முதல்முறையாக அப்பல்லோ ராக்கெட் மூலம் 1972இல் அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனுக்குச் சென்றனர். இது வரலாற்று ரீதியாக மிக முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஃபெர்பாமன்ஸ் எப்படி? அலசி ஆராயத் தொடங்கிய திமுக தலைமை! நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஃபெர்பாமன்ஸ் எப்படி? அலசி ஆராயத் தொடங்கிய திமுக தலைமை!

நாசா

நாசா

இதற்கிடையே சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்கா மீண்டும் அதே முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக ஆர்ட்டெமிஸ்-1 என்ற திட்டம் தொடங்கப்பட்டு, பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக ஆளில்லா ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே, எரிபொருள் கசிவு காரணமாக இந்தத் திட்டம் இரு முறை தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

சூறாவளி

சூறாவளி

அடுத்த முயற்சியை அமெரிக்காவில் ஏற்பட்ட நிக்கோல் சூறாவளி தடுத்து நிறுத்தியது. இந்த சூறாவளி கேப் கனாவரல் பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தின. இருந்த போதிலும், நாளை புதன்கிழமை இந்த ராக்கெட்டை செலுத்த அமெரிக்கா ரெடியாகி வருகிறது. இதற்கிடையே சூறாவளியால் ராக்கெட்டின் முக்கிய பகுதிகளில் எதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்துக் கூடுதல் ஆய்வு நேற்று நடத்தப்பட்டது. இதில் ராக்கெட்டின் தயார் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சேதம்

சேதம்

நிக்கோல் சூறாவளியால் சிறிய சேதமே ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சூறாவளியால் ஏற்பட்ட பலத்த காற்றால் ராக்கெட் மீதான இன்சுலேடிங் கவ்ல்கிங் (insulating caulking) சேதமடைந்து இருந்தது. இருந்த போதிலும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் திட்டமிட்டபடி நாளை புதன்கிழமை இந்த ராக்கெட்டை ஏவச் செய்ய நாசா முடிவு செய்து உள்ளனர். ராக்கெட்டை ஆய்வு செய்த வல்லுநர்கள், அது தயாரான நிலையில் உள்ளதாகப் பரிந்துரைத்து உள்ளனர்.

பாகங்கள் அகற்றம்

பாகங்கள் அகற்றம்

நாசா இப்போது பச்சைக் கொடி காட்டி நிலையில், இந்த ராக்கெட் நாளை புதன்கிழமை இந்திய நேரப்படி காலை 11.34 மணி அளவில் கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது. ஆர்டிவி எனப்படும் இன்சுலேடிங் கவ்ல்கிங்கின் (insulating caulking) ஒரு பகுதி தான் ஆய்வாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. சூறாவளிக் காற்றால் ஆர்டிவியின் 10-அடி (3-மீட்டர்) பகுதி அகற்றப்பட்டு உள்ளது.

பாதிப்பு ஏற்படுமா

பாதிப்பு ஏற்படுமா

அகற்றப்பட்ட இந்த பகுதி ராக்கெட் ஏவப்படும் போது அதிக வெப்பத்திற்கு வழிவகுக்கும் என்றும் சிலர் கவலை தெரிவித்து உள்ளனர். இருப்பினும், இதை ஆய்வு செய்ய வல்லுநர்கள் இந்த அகற்றப்பட்ட பகுதியால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றே குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகவே லன்ச்-க்கு அனுமதி அளித்துள்ளனர். இருப்பினும், கடைசி நேரத்தில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் ராக்கெட் ஏவும் முயற்சி கைவிடப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

ஆர்ட்டெமிஸ் 1

ஆர்ட்டெமிஸ் 1

இந்த ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெட் சந்திர சுற்றுப்பாதையில் ஏவப்படாத வரை சென்றுவிட்டு மீண்டும் திரும்பும். அடுத்தாண்டு ஏவப்பட உள்ள ஆர்ட்டெமிஸ் 2, விண்வெளி வீரர்களைச் சந்திரனைச் சுற்றி இருக்கும் வட்டப் பாதைக்கு அழைத்துச் செல்லும். இந்த இரண்டும் வெற்றிகரமாக நடந்தால் 2024 அல்லது 2025ஆம் ஆண்டில் ஆர்ட்டெமிஸ் 3, அமெரிக்க விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும்.

English summary
NASA's Artemis 1 moon mission will attempt to launch on Wednesday: NASA's Artemis 1 moon rocket launch latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X