Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விண்கல் மோதல்.. சூரிய கிரகணம்! நிலவின் மறுபக்கம் ஆய்வு செய்யும் ஆர்டெமிஸ் II குழு.. மர்மம் உடையுமா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 4 விண்வெளி வீரர்களுடன் நிலவின் மறுபக்கத்தை நோக்கி ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம் பயணித்து வருகிறது. நிலவின் சுற்று வட்டப்பாதையை நெருங்கியுள்ள அவர்கள், இன்று நிலவின் மறுபக்கத்திற்கு செல்கிறார்கள். அப்போது அவர்கள் புவியின் தாழ் சுற்றுப்பாதைக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த தரவுகளையும் சேகரிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மனிதர்கள் நிலவில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், தற்போது நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆர்ட்டெமிஸ் 2 என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தியது.

Artemis II Set to Observe Meteor Impacts and Rare Lunar Phenomena

நிலவை நோக்கி பயணம்

இந்த நிலையில் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு 4 விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப நாசா முடிவு செய்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இதற்கான பயணத்தை தொடங்க நாசா திட்டமிட்டிருந்தது. அதன்படி இந்த பயணம் கடந்த 2 ஆம் தேதி அதிகாலை வெற்றிகரமாக தொடங்கியது. ஆர்ட்டெமிஸ் 2 என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில், மொத்தம் 4 விண்வெளி வீரர்கள் நிலவை நோக்கி பயணிக்கிறார்கள்.

நிலவின் மறுபக்கம்

இந்தக் குழுவில் நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடா நாட்டின் விண்வெளி வீரரான ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் கிறிஸ்டினா கோச், நிலவுக்குப் பயணம் செய்யும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்த ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து சுமார் 4 நாட்களுக்குப் பிறகு நிலவை நெருங்கியுள்ளது.

ஆர்டெமிஸ் 2 விண்கலம், நிலவின் மறுபக்கத்தை சுற்றி வரும். விண்வெளி வீரர்கள், புவியின் தாழ் சுற்றுப்பாதைக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த தரவுகளையும் சேகரிப்பார்கள். விண்கலம் நிலாவின் மறுபுறம் செல்லும் போது காட்சி பூமியுடன் தொடர்பு சுமார் 40 நிமிடங்கள் துண்டிக்கப்படும்.

முக்கிய திருப்புமுனையாக அமையும்

நிலாவின் மறுபக்கம் பெரும்பாலும் இருளில் மூழ்கியிருக்கும்; சுமார் 20% பகுதி மட்டுமே சூரிய ஒளியில் தெரியும். விண்வெளி வீரர்கள் நிலவில் விண்கல் தாக்கும் போது உருவாகும் சிறிய ஒளித் துளிகளை கவனிப்பார்கள். மேலும், நிலாவின் தரையிலிருந்து மேலெழும் தூசி துகள்கள் சூரிய ஒளியில் மிதமாக ஒளிரும் காட்சியையும் கண்காணிப்பார்கள். இந்த நிகழ்வு அரிதானதும், இதுவரை விஞ்ஞானிகளால் முழுமையாக புரிந்துகொள்ளப்படாத ஒன்றுமாகும்.

இந்த பயணத்தின் மற்றொரு முக்கிய கட்டம் என்னவென்றால், விண்கலம் சூரியன் மற்றும் பூமி நேர்கோட்டில் வரும் போது, விண்வெளி வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் முழு சூரிய கிரகணத்தை காணவுள்ளனர். ஆழமான விண்வெளியில் மட்டுமே காணக்கூடிய இந்த அரிய நிகழ்வையும் ஆர்டெமிஸ் 2 குழு காண உள்ளது. இந்த ஆய்வு நிலவு குறித்த ஆராய்ச்சியில் மிக முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+