நீச்சல் குளம் அளவு இருக்கும்..காதலர் தினத்தில் பூமி மீது சிறுகோள் மோத வாய்ப்பு? ஆனாலும் ஒரு ட்விஸ்ட்
வாஷிங்டன்: பூமியில் இருந்து 18 மில்லியன்கள் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள 2023 DW என்ற சிறுகோள், 2046 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று பூமி மீது மோதுவதற்கு மிகச் சிறிய அளவிலான வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாம் வசிக்கும் இந்த பூமியாக பல்வேறு பேரதிசயங்களை கொண்டது. மனிதன் கற்பனையால் கூட எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு பேரதிசயங்கள் இந்த பிரபஞ்சம் உள்ளடக்கியது.
பூமியின் தோற்றம் எப்படி ஏற்பட்டது என்பது முதல் பெருவெடிப்பு முதலில் நிகழ்ந்தது என்பதுவரை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூரியக்குடும்பம்
நாம் வாழும் பூமியும் சூரியக் குடும்பத்தில் ஒரு அங்கம்தான். சூரியக்குடும்பத்தில் எப்படி ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றதோ அது போல சிறுகோள் எனப்படும் ஆஸ்ட்ராய்டுகளும் சூரிய குடும்பத்தின் உட்புற பகுதியில் சூரியனை சுற்றி வருகிறது. சூரியனை நீள்வட்டப்பாதைகளில் கோள்கள் சுற்றி வருகின்றன. அதேபோல் சிறுகோள்கள், தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவைகளும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டுதான் உள்ளது.

வால் நட்சத்திரங்கள்
இந்த சிறுகோள்கள், விண்கற்கள், தூசுகள் போன்றவை சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கான காலம் வேறுபட்டதாகும். சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும் வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள் போன்றவை ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுகிறது என்றால், தொலைவில் உள்ள வால் நட்சத்திரங்கள் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே கூட சுற்றுகின்றன. அதாவது சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் கூட எடுத்துக்கொள்ளும் வால் நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் உள்ளது.

பூமி மீது மோத வாய்ப்பு
சூரியனை சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றுவது போல பூமியின் சுற்றுவட்டப்பாதையிலும் பல பல சிறு கோள்களும் விண்கற்களும் கடந்து செல்கின்றன. இத்தகைய சிறுகோள்கள் பூமியை கடந்து செல்லும் போது சில நேரங்களில் மிக அரிதாக பூமி மீது மோதுவதும் உண்டு. பெரும்பாலும் இவை வளிமண்டலத்திற்கு முன்பே சிதைந்து விடக்கூடும். இதனால், பூமிக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த நிலையில், பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குள் பெரிய அளவிலான ஒரு சிறுகோள் நுழைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நீச்சல் குளம் அளவிற்கு பெரியது
தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு இருந்த சிறுகோள் ஆனது ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவிற்கு கிட்டத்தட்ட இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த சிறுகோள் இன்னும் 23 ஆண்டுகள் கழித்து காதலர் தினத்தன்று அதாவது 2046 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி பூமி மீது மோதுவது சிறிய வாய்ப்புகள் உள்ளதாம். இந்த சிறுகோளுக்கு 2023DW என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் பூமி மீது மோதுவதற்கு 625 ல் ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

2046 ஆம் ஆண்டு பூமி மீது மோதுமாம்
50 மீட்ட விட்டம் கொண்ட சிறுகோள் ஐரோப்ப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ரிஸ்க் லிஸ்ட்டில் முதலிடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் பூமி மீது மோதுவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்பதால் இதை பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என்று விஞ்ஞானிகள் கூறும் தகவலாக இருக்கிறது. அதேவேளையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, இந்த சிறுகோள் 2046 ஆம் ஆண்டு பூமி மீது மோதுவதற்கு சிறிய அளவிலான வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது.

18 மில்லியன் கி.மீ. அப்பால் உள்ளது
இது தொடர்பாக நாசா தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "விண்ணில் புதிய பொருள்கள் கண்டறியப்படும் போது சுற்றுவட்டப்பாதையில் அது செல்லும் திசை உள்ளிட்டவற்றை கணிக்க சில வாரங்களுக்கும் மேலான டேட்டாக்கள் தேவைப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் ஆனது கடந்த மாதம் 2 ஆம் தேதி முதன் முதலாக தென்பட்டுள்ளது. நொடிக்கு 25 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த சிறுகோள் பூமியில் இருந்து 18 மில்லியன்கள் கி.மீட்டருக்கு அப்பால் உள்ளதாம். சூரியனை ஒருமுறை சுற்ற 271 நாட்கள் இந்த சிறுகோள் எடுத்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications