பிரபஞ்சத்தில் ஒரு அதிசயம்! "160 கோடி டெஸ்லா!" இதுவரை கண்டிராத காந்த சக்தி! மிரண்டுபோன ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: சுமார் 22 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் மிக அதிகளவு காந்த சக்தியுடன் கூடிய ஒரு நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரபஞ்சம் குறித்துத் தெரிந்து கொள்ள உலகெங்கும் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பூமியைப் போல மற்றொரு கிரகம் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அப்படித்தான் இப்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ள ஒரு விஷயம் அனைவருக்கும் பெரிய ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.

காந்த புலன்
இதற்கிடையே, கேலக்ஸியில் பூமியிலிருந்து சுமார் 22,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் (Swift J0243.6+6124) இயற்பியலாளர்கள் இதுவரை கண்டிராத அளவுக்கான காந்த சக்தியுடன் கூடிய ஒரு நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக 1 பில்லியன் டெஸ்லா மின்காந்த சக்தி கண்டுபிடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்த நிலையில், இப்போது சுமார் 1.6 பில்லியன் டெஸ்லா காந்தப்புலன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

160 கோடி டெஸ்லா
ஓர் ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால், நமது பிரிட்ஜ்களில் இருக்கும் சாதாரண காந்தம் சுமார் 0.001 டெஸ்லா காந்தப்புலம் வெளியிடும். மிகவும் சக்திவாய்ந்த எம்ஆர்ஐ இயந்திரங்கள் 3 டெஸ்லா காந்தப்புலம் வெளியிடும். சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் வெறும் 100 மைக்ரோ விநாடிகள் 1,200 டெஸ்லா காந்தப்புலம் வெளியிடும் பொருளை உருவாக்கி இருந்தனர். இத்துடன் பார்க்கும் போது 1.6 பில்லியன் (160 கோடி) டெஸ்லா என்பது எவ்வளவு பெரியது என்பது புரியும்.

மின்னல் வேகம்
இப்படி மிகப் பெரிய மின்காந்தத்தைப் பெரிய பொருள்களால் மட்டுமே அடைய முடியும். அது போன்ற பொருட்கள் நம்ப முடியாத வேகத்தில் சுழல வேண்டும். எந்தளவு வேகம் என்றால் எலக்ட்ரான்களை முடுக்கிவிட போதுமான வேகத்தில் சூழலும் போது தான், இவ்வளவு அதிக மின்காந்தத்தை உருவாக்க முடியும். எனவே, இந்த நட்சத்திரம் குறித்து மேலும் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சிக்கல்
தொலைதூர பொருளின் காந்தப்புலத்தை அளவிடுவது, மிகவும் சிக்கலானது. அவை எவ்வளவு வலிமையாக இருந்தாலும், அந்த புலங்கள் ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் பயணிக்கும் போது அவை விரைவாகப் பலவீனமடைகின்றன. இருப்பினும், காந்தப் பந்தயப் பாதையில் வீசும் எலக்ட்ரான்களிலிருந்து எக்ஸ்-கதிர்களின் சிதறல்கள், சைக்ளோட்ரான் அதிர்வு மூலம் காந்தப்புலம் மதிப்பிட முடியும்.

சீனா
இதற்காகவே கடந்த 2017இல் சீன ஆய்வாளர்கள் இன்சைட்- எச்எக்ஸ்எம்டி அமைப்பை அறிமுகப்படுத்தியது. இது தொலைதூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் வெளியிடும் காந்தப்புலம் அளவிட உதவுகிறது. இதன் மூலமே இப்போது Swift J0243.6+6124இன் காந்தப்புலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஜெர்மனி நாட்டு ஆய்வாளர்களும் இதனை உறுதி செய்துள்ளனர்.

பல்சர்
Swift J0243.6+6124 என்பது நமது விண்மீன் மண்டலத்தில் உள்ள ஒரே அல்ட்ரா-லுமினசென்ட் எக்ஸ்-ரே பல்சர் ஆகும். பல்சர் என்றால் சூப்பர்-காம்பாக்ட் காஸ்மிக் ஹெவிவெயிட் வகை நட்சத்திரம் ஆகும். இதன் காந்தப்புலம் துல்லியமாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதன் மேற்பரப்பில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. மேலும், இந்த நட்சத்திரங்கள் பூமியில் நாம் உருவாக்க முடியாத அணு மிக்ஸ்கை கொண்டது. அதன் காந்த பண்புகள் அதன் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டு உள்ளது.
Recommended Video

உதவும்
மேலும், இந்த காந்தப்புலம் பல துருவங்களைக் கொண்ட சிக்கலானதாக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாகப் பூமியில் இருக்கும் காந்த புலன்களில் வடக்கு தெற்கு என இரு புலன்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த நட்சத்திரத்தின் காந்தப்புலம் பல துருவங்கள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பிரபஞ்சம் குறித்த ஆய்வில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications