ஒபாமாவிடம் இருந்து வந்த ஒற்றை ஃபோன் கால்! குஷியில் கமலா ஹாரிஸ்- அடடே அமெரிக்க அரசியல் மொத்தமா மாறுதே
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இதற்கிடையே அவருக்கு முன்னாள் அமெரிக்க அதிபரான ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். டிரம்பிற்கு எதிராகக் கமலா ஹாரிஸ் களமிறங்கும் நிலையில், ஒபாமாவின் ஆதரவு ரொம்பவே முக்கியமான பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இருந்த பைடன் போட்டியிடக் கூடாது என அழுத்தம் அதிகரித்தது. இதையடுத்து வேறு வழியின்றி அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாகச் சமீபத்தில் அறிவித்தார்.

கமலா ஹாரிஸ்: இதையடுத்து பைடனுக்கு பதிலாக ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. அவருக்கு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், ஒபாமா ஆதரிக்காதது பேசுபொருளாகவே இருந்தது. இதற்கிடையே முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஆகியோர் ஒரு வழியாக இப்போது கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஒபாமா: பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் நேரடியாகக் கமலா ஹாரிஸுக்கு கால் செய்து பேசும் ஒரு நிமிட வீடியோ இணையத்தில் இப்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் கமலா ஹாரிஸை தொடர்பு கொள்ளும் ஒபாமா, "உங்களை ஆதரிப்பதில் எனக்கும் மிஷேலுக்கும் மிக்க மகிழ்ச்சி.. உங்களை அதிபராக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். உங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். இது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருக்கும்" என்று ஒபாமா கூறுகிறார். அதற்குப் பதிலளித்த கமலா ஹாரிஸ், "இருவருக்கும் நன்றி. இது எனக்கு ரொம்பவே முக்கியமானது.. வரும் காலத்தில் உங்களுடன் பிரச்சாரம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன்" என்று கூறினார்.
ஆதரவு: இந்த போன் கால் இயல்பாகவே நடந்த ஒன்று என்றும் இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வீடியோ இல்லை என்றும் கமலா ஹாரிஸ் பிரச்சார டீம் விளக்கமளித்துள்ளது. ஜனநாயக கட்சியில் இருந்து ஏற்கனவே பில் கிளிண்டன், ஹிலாரி கிளிண்டன் எனப் பலரும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், இப்போது ஒபாமாவும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.
ஒபாமா ஆதரவு ஏன் முக்கியம்: அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான ஒபாமாவின் ஆதரவு கமலா ஹாரிஸுக்கு ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. அவர் அதிபர் பதவியில் இருந்து விலகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் ஜனநாயக கட்சியில் மிகவும் செல்வாக்கான நபர்களில் ஒருவராகவே ஒபாமா இருந்து வருகிறார்.
இதன் காரணமாகவே பைடன் பலரும் அழுத்தம் கொடுத்த போதும் விலகவில்லை. இருப்பினும் பைடன் போட்டியிட வேண்டாம் என ஒபாமா நினைப்பதாகத் தகவல் வந்த இரண்டே நாட்களில் அதிபர் ரேஸில் இருந்து பைடன் விலகி இருந்தார். பைடன் விலகி உடனேயே அடுத்து கமலா ஹாரிஸ் தான் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது. இருப்பினும், அப்போது ஒபாமா அவருக்கு ஆதரவு தரவில்லை.
சுமார் ஒரு வாரத்திற்கு பிறகே இப்போது கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஒபாமாவின் ஆதரவு என்பது கமலா ஹாரிஸுக்கு மிகப் பெரிய பூஸ்டை தரும். அமெரிக்க அதிபர் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications