என்னை எப்போதும் சிரிக்க வைப்பது இந்த பெண்கள்தான்.. காதலர் தினத்தில் சிலிர்த்து நெகிழ்ந்த ஒபாமா
வாஷிங்டன்: மனைவி, மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா காதலர் தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளார். ஆனால் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை.
காதலர் தினம்.. காதலன் காதலிக்கும், காதலிக்கு காதலனிடத்திலும் காட்டுவது மட்டுமில்லை காதல். காதல் என்றால் அன்பு அந்த அன்பு கட்டிய மனைவியிடமும், கட்டின கணவரிடமும், மகள்கள், மகன்களிடமும் காட்டலாம்.
அந்த வகையில் காதலர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் மேற்கொண்ட உறவு முறையினர் தங்கள் அன்பை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர்.

புகைப்படம்
இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா காதலர் தின வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் மனைவி மிக்சல் ஒபாமா, மகள்கள் மலியா ஆன் ஒபாமா, சாஷா ஒபாமா ஆகியோருடன் ஒபாமா இருக்கும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

ஒபாமா
அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. அவர் ட்வீட்டில் கூறுகையில் காதலர் தின வாழ்த்துகள். என்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள தவறாத இந்த 3 பெண்களுக்கும் காதலர் தின வாழ்த்துகள். உங்களது திகைப்பூட்டும் மகிழ்ச்சி ஒளியானது எல்லாவற்றையும் பிரகாசமாக ஆக்குகிறது என ஒபாமா தெரிவித்துள்ளார்.

மகள்கள்
இந்த புகைப்படத்தில் ஒபாமா, மனைவி மிக்சல்லுக்கும் மூத்த மகள் மலியாவிற்கும் இடையே நிற்கிறார். அவரது இளைய மகள் சாஷா வெள்ளை நிற ஆடையில் மிளிர்கிறார். ஒபாமா எப்போதுமே தனது மனைவி, மகள்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

குடும்ப உறவு
அதிபராக இருந்த காலகட்டத்திலும் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை அவர் விடவில்லை. குடும்பத்தினருடன் பின்னி பிணைந்திருப்பதையே ஒபாமா விரும்புகிறார். இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் மலியா தந்தையை போலும் சாஷா தாயை போலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். சில நெட்டிசன்கள் அழகான குடும்பம் என பாராட்டியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications