Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெர்முடா முக்கோணம் என்றால் என்ன?.. மர்மங்கள் தெரிந்தும் அமெரிக்க கப்பல் நிறுவனத்தின் "பகீர்" ஆஃபர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பெர்முடா முக்கோணத்தை கடக்கும் போது தங்கள் சொகுசு கப்பல் காணாமல் போய்விட்டால் ஒரு முக்கிய ஆஃபரை வழங்குவதாக அமெரிக்க கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது இணையதளத்தில் சிரிப்பை வரவழைத்துள்ளது.

அட்லாண்டில் கடற்கரையில் உள்ளது பெர்முடா முக்கோணம். சுமார் 7 லட்சம் கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த முக்கோணத்தில் ஒரு முனை பெர்முடாவையும் மறு முனை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் மற்றொரு முனை போர்டொ ரிகோவையும் இணைக்கிறது.

Recommended Video

    BermudaTriangle-ல் காணாமல் போனால் பணம் வாபஸ்.. America நிறுவனம் அறிவிப்பு #World

    அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த முக்கோண பகுதிக்கு செல்லும் பொருட்கள் மாயமாகிவிடுவதாகவும் அதில் மர்மங்கள் அடங்கியதாகவும் கூறப்படுகிறது. அதாவது இந்த முக்கோணத்தை கடக்கும் கப்பல்கள், பறவைகள், விமானங்கள் என மாயமாகி விடுகிறது. இந்த மர்மம் 70 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வருகிறது.

    ஆயிரம் பேர்

    ஆயிரம் பேர்

    இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் இந்த பகுதியில் மாயமாகிவிட்டனர். இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் விடை கிடைக்கவில்லை. இதை சாத்தான் முக்கோணம் என்றும் அழைக்கிறார்கள். இங்கு ஏலியன்கள் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள்தான் கப்பல்கள், விமானங்களை மாயமாக்குகிறார்கள் என்கிறார்கள்.

    முக்கோணத்தில் என்ன இருக்கு

    முக்கோணத்தில் என்ன இருக்கு

    மேலும் இந்த முக்கோணத்தில் இருக்கும் ஒரு விதமான எரிவாயுவை சுவாசிப்பதால் கப்பல் மூழ்கிவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இங்கு எந்த மர்மமும் இல்லை என்றும் இந்த பகுதியில் அதிக அளவு புவி ஈர்ப்பு சக்தி இருப்பதால் பொருட்கள் மாயமாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    பெர்முடா முக்கோணம்

    பெர்முடா முக்கோணம்

    ஆனால் இந்த பெர்முடா முக்கோணத்தை பல சரக்கு கப்பல்கள் கடந்து சென்றிருக்கின்றன. அவற்றிற்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகள் கப்பல்கள் மட்டுமே மாயமாகியதாக கூறுகிறார்கள். இத்தனை ஆபத்தான இந்த பெர்முடா முக்கோணத்தை கடக்கும் அமெரிக்க கப்பல் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    பணம் திருப்பி தருவோம்

    பணம் திருப்பி தருவோம்

    அதன்படி பெர்முடா முக்கோணத்தை கடந்து செல்லும் போது தங்களது பயணிகள் கப்பல் ஒரு வேளை காணாமல் போய்விட்டால் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை மீண்டும் அவர்களிடம் திருப்பி அளித்துவிடுவோம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பெர்முடா முக்கோணத்திற்கு இந்த நிறுவனத்தின் கப்பல் சென்று காணாமல் போய்விட்டால் வாடிக்கையாளர்களின வங்கிக் கணக்கு திருப்பி செலுத்தப்படும் கட்டணத்தால் என்ன பயன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+