‛பாரத்’ என பெயர் மாறும் இந்தியா? ஐக்கிய நாடுகள் சபை சொல்வது என்ன? வெளியான புதிய தகவல்
வாஷிங்டன்: இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்றம் செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் என்பது தேவையானதாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளர் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்றம் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. வரும் 18 ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டம் 22ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்றம் செய்ய மசோதா கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் இந்த பெயர் மாற்ற நடவடிக்கையின் பின்னணியாக முக்கிய காரணம் ஒன்று கூறப்படுகிறது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த 26 கட்சிகள் ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த பெயரால் தான் மத்திய அரசு இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்ற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு முன்னோட்டமாக தான் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கும் ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு விருந்து வழங்க உள்ளார். இந்த விருந்துக்கான அழைப்பிதழில் ‛President of India' என்பதற்கு பதில் ‛President of Bharat' என அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் மோடியின் இந்தோனேசியாவின் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையிலும் Prime Minister of Bharat என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. ‛பாரத்' என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்தாலும் கூட மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் பெயர் மாற்றம் செய்கிறது என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் தற்போது இது சர்ச்சையாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஐக்கிய நாடுகள் சபை இதுபற்றி முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஒரு நாட்டின் பெயரில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் என்பது கிடைக்க வேண்டும். அந்த வகையில் தான் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்றால் ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கிடையே தான் இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றுவதற்கான பரிந்துரை வந்தால் என்ன செய்வோம் என்பது பற்றி ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரான அன்டோனியா குட்குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் விளக்கி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛கடந்த ஆண்டு துருக்கி(Turkey) தனது பெயரை துருக்கியே (Turkiye) என மாற்றம் செய்தது. இந்த விஷயத்தில் துருக்கி நாட்டின் அரசால் வழங்கப்பட்ட கோரிக்கையை நாங்கள் ஏற்றோம். இதேபோல் எங்களுக்கு பிற நாடுகளில் இருந்து கோரிக்கைகள் வந்தால் அதனை பரிசீலனை செய்வோம்'' என்றார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications