ஏமன் போருக்கு அளித்த ஆதரவு வாபஸ்.. அமைதியை நிலைநாட்ட.. விரைவில் சிறப்பு தூதரையும் நியமிக்கும் பைடன்
வாஷிங்டன்: ஏமன் நாட்டில் நடக்கும் போருக்கு அளித்து வந்த ஆதரவை நிறுத்தவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், மிக விரைவில் ஏமன் நாட்டிற்குச் சிறப்பு தூதரையும் ஜோ பைடன் நியமிக்கவுள்ளார்,
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் பல முக்கிய உத்தரவுகளை ஜோ பைடன் பிறப்பித்து வருகிறார். பாரீஸ் பருவ நிலை மாற்றம் ஒப்பந்தம். மெக்சிகோ சுவர் கட்டுமானம், உலக சுகாதார அமைப்பு என டிரம்பின் பல்வேறு முடிவுகளையும் மாற்றி வருகிறார்.
இந்நிலையில், அதிபராகப் பதவியேற்ற பின், இன்று தனது அதிகாரிகளுடன் உரையாற்றிய பைடன், ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் போருக்கு ஆயுத விற்பனை உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை நிறுத்தவுள்ளதாக அறிவித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ஏமன் நாட்டின் மீது சவூதி அரேபிய ராணுவ ரீதியான நடவடிக்கையை தொடங்கியது. அப்போது முதலே டிரம்ப் அரசு இதற்கு ஆதரவு தெரிவித்து வந்தது.

சவூதிக்கு ஆதரவு தொடரும்
அதே நேரம், சவூதி அரேபியா ஏவுகணைத் தாக்குதல்கள், யுஏவி தாக்குதல்கள் ஆகிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்றும் சவூதி அரேபியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து ஆதரவளிக்க உதவப் போகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சவூதி வரவேற்பு
பைடனின் இந்த முடிவை சவூதி அரசு வரவேற்றுள்ளது. இது குறித்து சவூதியின் துணை பாதுகாப்புத் துறை அமைச்சர் இளவரசர் கலீத் பின் சல்மான், "மோதல்களைத் தீர்க்க கூட்டணி நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும், ஈரான் பிராந்தியத்தில் உள்ள பிரச்னைகளை கையாளவும் பைடன் அரசு எடுத்துள்ள முடிவுகளை நாங்கள் வரவேற்கிறோம். அமெரிக்காவின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம்" என்று பதிவிட்டிருந்தார்.

ஏமன் சிறப்புத் தூதர்
மேலும், ஏமன் நாட்டிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதரையும் பைடன் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த அதிகாரியான திமோதி லெண்டர்கிங் என்பவரை ஏமன் நாட்டின் தூதராக பைடன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமோதி லெண்டர்கிங் தற்போது அமெரிக்காவின் மத்திய கிழக்கு பிரிவில் துணை உதவி செயலாளராக உள்ளார்.

திமோதி லெண்டர்கிங்
அவர் ஏற்கனவே பல ஆண்டுகள் சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் அமெரிக்க தூதராக பணியாற்றியவர், மத்திய கிழக்கு நாடுகள் குறித்து இவருக்கு எல்லாம் அத்துப்படி. திமோதி லெண்டர்கிங் மூலம் ஏமன் நாட்டில் நிலவும் உள்நாட்டுக் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று பைடன் நம்புகிறார்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications