ஓகே.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. பிடனுக்கு ஒத்துழைப்பு வழங்க டிரம்ப் உத்தரவு!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அமெரிக்க அரசின் பொது சேவைகள் நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக ஒப்பு கொண்டதை அடுத்து ஜோ பிடனின் புதிய அரசு அமைவதற்கான ஒத்துழைப்பை வழங்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறங்கி வந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் அதிபர் டிரம்பை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். துணை அதிபராக இந்திய வம்சாவளியில் வந்த தமிழ்ப் பெண் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

தற்போதைய அதிபர் டிரம்பால் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. என்னென்னவோ செய்து பார்த்தார். சட்ட போராட்டம் நடத்தியும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் தற்போது ஜோ பிடன் வெற்றியை முழுமையாக ஏற்க அவர் முடிவு செய்துள்ளார். புதிய அரசு அமைய ஒத்துழைக்குமாறு அவர் தனது சட்ட அணியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், .ஆரம்ப நெறிமுறைகள் தொடர்பாக பொது சேவைகள் நிர்வாகத் தலைவர் எமிலி மர்பியும், அவரது குழுவும் செய்ய வேண்டியதைச் செய்யுமாறு நான் பரிந்துரைக்கிறேன், அதையே செய்யும்படி எனது அணியிடமும் கூறியுள்ளேன் என்றார் .
இதனை தொடர்ந்து பொது சேவைகள் நிர்வாகத் தலைவர் எமிலி மர்பி, ஜோபிடன்க்கு கடிதம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக பிடன் நிர்வாகம் அமைவதற்கான பணிகள் தொடங்கி விட்டன. முறையான நிர்வாக மாற்றத்திற்கு புதிய அதிபர் தலைமையிலான நிர்வாகம் தயாராக தொடங்கியுள்ளது.
பொது சேவைகள் நிர்வாகத்தின் அறிவிப்பு தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் நமது பொருளாதாரம் மீண்டும் பாதையில் செல்வதற்கும்" தேவையான முதல் படி" என்று பிடன்-ஹாரிஸ் மாற்ற செயல்பாடுகளுக்கான நிர்வாக இயக்குனர் யோகன்னஸ் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் ஜோ பிடன் நிர்வாகம் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கொரோனா வைரஸ் பணிக்குழுவை ஒருங்கிணைப்பது மற்றும் பொது சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பது உள்ளிட்ட செயல்களை முன்னெடுத்தது.
இந்த நிலையில் ஜோபிடன் நிர்வாகம் அமைவதற்கான அதிகாரப்பூர்வ பணிகள் தொடங்கியுள்ளன. பிடனும் தனது அமைச்சரவையை முடிவு செய்ய ஆரம்பித்துள்ளார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications