11 வயசுலயே "பலான படம்" பார்க்க தொடங்கிட்டேன்.. பளிச்சுன்னு சொன்ன பாடகி!
வாஷிங்டன்: அமெரிக்காவின் பாடகி மற்றும் பாடலாசிரியர் பில்லி எய்லிஷ் தனது 11 வயது முதல் ஆபாச படங்களை பார்க்கத் தொடங்கியதாகவும் அதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் வெளிப்படையாக விவரித்துள்ளார்.
அந்த காலத்தில் மிகவும் அரிதாக இருந்த ஆபாச படங்கள், இன்று தடுக்கிவிழுந்தால் நிறைய சைட்டுகளில் படம் தென்படும் என்பது போல் ஆகிவிட்டது. இது டீன் ஏஜ் வயதினரை மிகவும் பாதித்து அவர்களது வாழ்க்கை திசை மாற வாய்ப்புள்ளது.
இதனால் இந்த ஆபாச படங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் படி அந்த சைட்டிலேயே நீங்கள் 18 வயதுக்குள் மேற்பட்டவரா என கேட்கும் போது 8 வயது குழந்தை கூட ஆம் எனக்கு 18 வயது என கூறிவிட்டு உள்ளே போகும் அளவுக்கு உள்ளது.

பாதிப்பு
இது போன்ற ஆபாச படங்களை பார்த்தால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து அமெரிக்காவின் பாடகி, பாடலாசிரியர் பில்லி எய்லிஷ் விவரித்துள்ளார். இவருக்கு தற்போது 19 வயது ஆகிறது. இவர் கிராமி விருது பெற்ற பாடகி ஆவார். இவர் அமெரிக்காவில் ஒரு வானொலி நிகழ்ச்சியில் பேசுகையில் நான் 11 வயது முதல் ஆபாச படங்களை பார்க்க தொடங்கினேன்.

அவமானம்
ஆபாச படங்களை பார்ப்பது அவமானம் என நினைத்தேன். உண்மையை சொல்ல போனால் நான் நிறைய ஆபாச படங்களை பார்த்துள்ளேன். ஒரு கட்டத்தில் நான் அந்த படங்களுக்கு அடிமையாகிவிட்டேன். எனது மூளை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனது மனம் நான் சொல்வதை கேட்க மறுத்து எப்போதும் ஆபாச படங்களை பார்க்க தூண்டியது.

ஆபாச படங்கள்
இது இரவு நேரங்களில் கனவாக வந்தும் என்னை பயமுறுத்தியது. இது போன்ற ஆபாச படங்களை பார்ப்பதால் ஏற்படும் பிரச்சினை என்னவெனில், உடலுறவின் போது அது இயல்பானது என்ற எண்ணத்தை தூண்டிவிட்டது. இருந்தாலும் அந்த படங்களை நான் பார்த்தேன்.

யுனிசெப் ஆர்வலர்கள்
என்னை ஈர்த்ததால் நான் அந்த மாதிரியான படங்களை பார்த்தேன் என்றார். இது போல் அந்த பாடகி சொன்னதும் அருகில் இருந்த அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து யுனிசெப்பை சேர்ந்த ஆர்வலர்கள் கூறுகையில் இது போல் ஆபாச படங்களை பார்த்தால் மனநிலை மோசமாகும். பாலியல் வன்முறைகள் பெருகும். பிற எதிர்மறை விளைவுகளும் ஏற்படும் என்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications