வெறும் 20 நிமிடங்கள்.. ரூ.53,000 கோடி கிரிப்டோகரன்சிகள் மாயம்! ஹேக் செய்து தூக்கிய வடகொரிய கும்பல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் மிக பெரிய கிரிப்டோகரன்சி தளமான பைனான்ஸில் (Binance) இருந்து சுமார் 6.4 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ திருடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் சர்வதேச அளவில் கிரிப்டோ சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், வடகொரிய ஹேக்கர் குழு இதற்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோகரன்சிக்களில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இந்த கிரிப்டோகரன்சிக்களில் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும் கூட அவற்றுக்கு தடை விதிக்கப்படவில்லை.

Binance Crypto Hack Crypto Crypto hack

மிக பெரிய ஹேக்கிங்

இதற்கிடையே உலகின் மிக பெரிய கிரிப்டோகரன்சி தளமான பைனான்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சுமார் 6.4 பில்லியன் டாலர் மதிப்பில், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,000 கோடி கிரிப்போட்டோ கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர் குழு இந்த கொள்ளையை நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கிரிப்டோ வரலாற்றிலேயே இதுதான் மிக பெரிய கிரிப்டோ கொள்ளை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வடகொரியாவுடன் தொடர்புடைய TraderTraitor என்ற ஹேக்கர் குழுவே இந்த கொள்ளையை நடத்தியிருக்கலாம் என அமெரிக்காவை சேர்ந்த பிளாக்செயின் விசாரணை நிறுவனமான டிஆர்எம் லேப்ஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட முறை, பிளாக்செயினில் பதிவான பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை வைத்து பார்த்தால் அது வடகொரிய ஹேக்கர்களுடன் ஒத்துப்போவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. பிளாக்செயின் ஆய்வு நிறுவனமான Chainalysisம் வடகொரிய ஹேக்கர்களே இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

வெறும் 20 நிமிடங்கள்

நேற்று அக்டோபர் 30ம் தேதி இந்த ஹேக்கிங் நடந்துள்ளது. பைனான்ஸ் வாலெட்டுகளில் இருந்து 10 வெவ்வேறு பிளாக்செயின்கள் வழியாக சுமார் 6.36 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ திருடப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான தொகை வெறும் 20 நிமிடங்களுக்குள் திருடப்பட்டுள்ளது. இதுவே இதுவரை பதிவான மிக பெரிய கிரிப்டோ திருட்டாக இருக்கலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, திருடப்பட்ட சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோவை முடக்க பிளாக்செயின் நிறுவனங்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பைனான்ஸ் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் கிரிப்டோ கரன்சிக்களை மீட்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பைனான்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க 6.34 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் பைனான்ஸ் தெரிவித்துள்ளது. இதில் 5 பில்லியன் டாலர் பாதிக்கப்பட்ட அதே வகை கிரிப்டோகரன்சியாக வைத்திருப்பதாகவும் விளக்கியுள்ளது.

முதல்முறை இல்லை

வடகொரிய ஹேக்கர்கள் கிரிப்டோவை இதுபோல ஹேக் செய்வது இது முதல்முறை இல்லை. கடந்த 2025 பிப்ரவரியில் பைபிட் என்ற கிரிப்டோ நிறுவனத்தை ஹேக் செய்து 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ திருடப்பட்டது. அதற்கும் இந்த ஹேக்கிங் கும்பலே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. தற்போது பைனான்ஸ் நிறுவனத்தையும் அதே கும்பல் தான் ஹேக் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது ஹேக் செய்த இந்த கும்பல் கூட வடகொரியாவுடன் தொடர்புடைய லாசரஸ் க்ரூப்பின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் கிண்டல் செய்யும் வகையில் எடுக்கப்பட்ட தி இண்டர்வியூ படத்தை தயாரித்த சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தொடர்ச்சியாக சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலுக்கும் இந்த ஹேக்கிங் குழு தான் காரணமாக இருந்தது.

பைனான்ஸ் தாக்குதல் குறித்த செய்திகள் வெளியானதும் பல கிரிப்டோகரன்சிக்கள் கடுமையாக சரிந்தது. பிட்காயின் விலை சுமார் 4 சதவீதம் சரிந்து 77,465 டாலராக குறைந்தது. எத்தேரியம் விலை 6 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+