கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா..இறந்த பிரபலங்களுக்கும் ப்ளு டிக்.. ட்விட்டரை கலாய்கும் நெட்டிசன்கள்
வாஷிங்டன்: 1 மில்லியன் பாலோயர்களுக்கு மேல் உள்ள கணக்குகளுக்கு மீண்டும் ப்ளு டிக் வசதியை ட்விட்டர் நிறுவனம் கொடுத்த நிலையில், தற்போது உயிரிழந்த பல பிரபலங்களின் கணக்குகளுக்கும் மீண்டும் ப்ளு டிக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பிரபல முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை உலக பெரும் பணக்காரரன எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கினார். எலான் மஸ்க் வசம் ட்விட்டர் சென்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ட்விட்டரில் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. அதோடு ட்விட்டர் திவால் ஆகிவிடும் என்று ட்விட்டர் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைளை எடுக்கப் போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்தார். அதன்படி, ட்விட்டரில் ப்ளூ டிக் என்ற ஒரு வசதியை அறிமுகம் செய்தார்.
இதன்படி பிரபலங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் டிவிட்டர் கணக்கை உறுதி செய்ய வழங்கப்பட்டு வந்த புளு டிக் வசதி அனைவருக்கும் வழங்கப்படும் என்றார். அதற்கு கட்டணமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
அதாவது, மாதம் 8 டாலர் அளவுக்கு அனைவருக்கும் செலுத்தினால் மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது. இந்த வசதியை பயன்படுத்தி பலரும் சந்தா கட்டணம் செலுத்தி ப்ளு டிக் வசதி வாங்கினர். அதேவேளையில் பிரபலங்கள் யாரும் இதற்கு அசைந்து கொடுக்கவில்லை. இதனால், சந்தா கட்டணம் செலுத்தாத பிரபலங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் ப்ளு டிக் வசதியை ட்விட்டர் கடந்த 20 ஆம் தேதி பறித்தது.
இதனால், அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு ப்ளு டிக் வசதி இல்லாமல் போனது. முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டவர்களின் ப்ளு டிக் வசதி போயிருந்தது. எங்கள் மூலம் ட்விட்டருக்கு வருமானம் கிடைக்கும் போது, நாங்கள் ஏன் ப்ளூ டிக்குகளுக்கு சந்தா செலுத்த வேண்டும் என்பதே அவர்களின் கேள்வியாக இருந்தது. இந்தச் சூழலில் அனைத்து பிரபலங்களுக்கும் மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது.
1 மில்லியன் பாலோயர்களுக்கு மேல் உள்ள கணக்குகளுக்கு மீண்டும் ப்ளு டிக் வசதியை கொடுத்தது. இதனால், பிரபலங்களின் ட்விட்டர் பேஜில் மீண்டும் ப்ளு டிக் வந்தது. ஆனால், இதில் ஒரு வினோத சம்பவமும் நடைபெற்றுள்ளது. உயிரிழந்த பல பிரபலங்களின் கணக்குகளுக்கு கூட மீண்டும் ப்ளு டிக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ரிஷி கபூர், இர்பான், பாடகி லதா மங்கேஷ்கர், அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே, கால்பந்து வீரர் பீலே என மறைந்த பல பிரபலங்களின் கணக்குகளுக்கு டிவிட்டரில் ப்ளூ டிக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
பல மாதங்களாக செயல்பாடு இன்றி கிடக்கும் இந்த கணக்குகளுக்கு ப்ளு டிக் வசதி கொடுக்கப்பட்டு இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. செயல்பாடு இல்லாமல் கிடக்கும் கணக்குகளுக்கு கூட ப்ளு டிக் வசதியை மீண்டும் கொடுத்துள்ளார்களே... டிவிட்டரின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா என்ற ரீதியில் கேலியும் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications