அமெரிக்காவுக்கு ஆப்பு வைக்கும் பிரிக்ஸ்! டிரம்ப் செய்த பெரிய தவறு.. பொருளாதார நிபுணர் எச்சரிக்கை
வாஷிங்டன்: இந்தியாவுக்கு 50% வரியை போட்டதன் மூலம் அமெரிக்கா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்றும், பிரிக்ஸ் அமைப்பை வளர்த்துவிடுவதே டிரம்ப்தான் எனவும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச பொருளாதார நிபுணர் 'ரிச்சர்ட் டி. உல்ஃப்' எச்சரித்திருக்கிறார்.
ரஷ்ய டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். அவர் பேட்டியில் மேலும் கூறியதாவது, "அமெரிக்கா உலக அரங்கில் தன்னை ஒரு ரவுடி போல காட்டிக்கொள்கிறது. இப்படி செய்வதன் மூலம் பிரிக்ஸ் நாடுகளை, மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக வளர்த்து விடுகிறது.

ரவுடியா? ஜோக்கரா?
குறிப்பாக டிரம்பின் நடவடிக்கை, பிரிக்ஸ் நாடுகளைப் பெரிய அளவில் ஒருங்கிணைந்ததாகவும், மேற்கத்திய நாடுகளுக்குப் பொருளாதார மாற்றாகவும் வளர்க்கும். அமெரிக்காவின் 50% வரி, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அதேபோல இந்த உண்மையின் மறு பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். உலகம் மாறிவிட்டது, மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. முன்பு சீனாவிற்கு இருந்த இந்த இடம் இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பு
இந்த சூழலில் நாம் அவர்களை அச்சுறுத்தினால், அவர்கள் வேறு பக்கம் கைகோர்த்துக்கொள்வார்கள். பிரிக்ஸைதான் சொல்கிறேன். பிரிக்ஸ் அமைப்பில் முக்கிய தலையாக இருக்கும் ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு நீண்டகால வரலாற்று உறவு உண்டு, இது சோவியத் யூனியன் காலத்திலிருந்தே இந்த உறவு தொடர்ந்து வருகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவுக்கு அதிக வரியை போடுவதன் மூலம், இந்தியா தனது பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரிக்ஸ் நாடுகளை தொடர்பு கொள்ளும். இதன் மூலம் பிரிக்ஸ் அமைப்பு வலுபெறும்.
உக்ரைன் விஷயத்தில் டிரம்ப் என்ன செய்தார்? ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடையை போட்டார். இதனால் ரஷ்யாவால் தனது பொருட்களை விற்க முடியாமல் போய்விட்டதா என்ன? அது மாற்று வழிகளை கண்டுபிடித்தது.
ரஷ்யாவின் உறவு
டிரம்பின் பொருளாதார தடைக்கு முன்னர், இந்தியாவுக்கு வெறும் 1% மட்டுமே கச்சா எண்ணெய்யை ரஷ்யா ஏற்றுமதி செய்தது. சீனாவுக்கு 41% என ஏற்றுமதி செய்தது. ஆனால் தடைக்கு பிறகு இந்தியாவுக்கு 40%, சீனாவுக்கு 81% அளவுக்கு என எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது. தவிர துருக்கியின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக ரஷ்யா மாறியிருக்கிறது. இதற்கு யார் காரணம்?
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அமெரிக்கா ஒரு முரடன் போல தெரியும். ஆனால் உள்ளுக்குள் அது தனக்கு தானே தீ வைத்துக்கொள்கிறது" என கடுமையாக சாடியிருக்கிறார்.
உக்ரைன் போர்
இவர் சொன்னது உண்மைதான். உக்ரைனுக்கு சப்போர்ட்டாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இருக்கின்றன. சப்போர்ட் எனில் வாய் மொழியாக ஆதரவு கிடையாது. அதைத்தாண்டி, உக்ரைனுக்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களையும், இதர உதவிகளையும் இந்நாடுகள் செய்து வருகின்றன. இது பெரிய செலவுதான். இந்த செலவு குறைய வேண்டும் எனில் போரில் உக்ரைன் வெற்றி பெற வேண்டும். அதுதான் நடக்கவில்லையே. எனவே குறுக்கு வழியை அமெரிக்கா யோசித்தது.
அமெரிக்காவின் கணக்கு
அதாவது, ரஷ்யாவை பலவீனப்படுத்தினால் அது பின்வாங்கிவிடும். இப்படியாக போரில் ஜெயித்துவிடலாம் என்பது அமெரிக்காவின் கணக்கு. ரஷ்யாவுக்கு எண்ணெய் விற்பனை மூலம்தான் காசு வருகிறது. இதுதான் ரஷ்யாவின் பலம். எண்ணெய் விற்பனையை தடுத்தால் ரஷ்யா பலவீனமடைந்துவிடும். எனவே இந்தியாவிடம் வந்து, "நீங்க ரஷ்யாகிட்ட இருந்து எண்ணெய் வாங்காதீங்க" என்று கூறியது. நாம் கேட்கவில்லை. எனவே 50% வரியை போட்டிருக்கிறது. இதனால் நாம் பிரிக்ஸ் நாடுகளுடன் நெருக்கம் காட்டி வருகிறோம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications