சாதி பாகுபாட்டை தடை செய்யும் மசோதா! நிராகரித்த கலிபோர்னியா ஆளுநர்! கொண்டாடும் இந்து அமைப்புகள்! ஏன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல்முறையாகச் சாதிய பாகுபாடுகளைத் தடுக்க கலிபோர்னியா மாகாண சட்டசபை கொண்டு வந்த புதிய சட்டத்தை அம்மாகாண ஆளுநர் நிராகரித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், நம்மால் சாதிய பாகுபாடுகளை ஒழிக்க முடியவில்லை. இன்னுமே கூட சில கோயில்களில் குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்க மறுக்கம் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த சாதிய பாகுபாடுகள் நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கே தடையாக இருக்கிறது என்பதே உண்மை. இப்போது இந்த சாதிய பாகுபாடுகளை இந்தியாவைத் தாண்டி மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.
புது மசோதா: அதாவது இப்போது வெளிநாடுகளுக்கு அதிகமாகச் சென்று செட்டிலாகி வரும் நிலையில், அங்கும் சாதிய பாகுபாடுகள் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுகிறது. அப்படி இந்தியர்கள் அதிகம் சென்று செட்டிலான நாடுகளில் ஒன்று அமெரிக்கா. அங்குள்ள ஐடி துறையில் இந்தியர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். அங்குள்ள டாப் ஐடி நிறுவனங்களில் இந்தியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதைப் பார்த்தாலே நமக்கு இது புரியும்.
அமெரிக்காவில் குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியர்கள் அதிகம். இதனால் அங்கே சாதிய பாகுபாடும் பிரச்சினையாக மாறிவிட்டது. இதற்கிடையே சாதிய பாகுபாடுகளைத் தடை செய்யும் மசோதா அங்கே சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. SB 403 என்ற இந்த மசோதா மீது கலிபோர்னியாவில் நீண்ட நெடிய விவாதம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
நிராகரிப்பு: அமெரிக்காவில் சாதிய பாகுபாடுகளை எதிராகக் கொண்டு வரப்பட்ட முதல் சட்டமாக இது பார்க்கப்படுகிறது. சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை இந்த சட்டம் தடை செய்கிறது. அதைத் தொடர்ந்து அந்த மசோதா கலிபோர்னியா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இருப்பினும், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் மறுத்துவிட்டார். ஆளுநரின் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மசோதாவை அவர் நிராகரித்தார்.
சாதிய பாகுபாட்டைத் தடை செய்ய ஏற்கனவே கலிபோர்னியாவில் சட்டங்கள் இருப்பதாகச் சொல்லி அவர் இந்த மசோதாவை நிராகரித்தார். இது தொடர்பாகக் கவின் நியூசோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கலிபோர்னியாவில் வாழும் மக்கள், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கிருந்து வந்திருந்தாலும், யாரை விரும்பினாலும் அவர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று நம்புகிறோம்.
கொண்டாடும் இந்து அமைப்புகள்: இதன் காரணமாகவே கலிபோர்னியா ஏற்கனவே பாலினம், இனம், நிறம், மதம், வம்சாவளி, பாலின அடையாளம் உள்ளிட்டவை அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடைசெய்கிறது. சாதிய பாகுபாடுகள் என்பது ஏற்கனவே உள்ள இந்த வகைகளின் கீழ் வந்துவிடுவதால் இந்த மசோதா தேவையற்றது" என்று கூறி அவர் இதை நிராகரித்தார்.
ஆளுநரின் இந்த முடிவை அங்குள்ள பெரும்பாலான இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன. இதை வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என்று குறிப்பிட்டுள்ள இந்து அமைப்புகள், அமெரிக்க அரசியலமைப்பு பேரழிவை கவர்னர் நியூசோம் இந்த முடிவால் தடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், குறிப்பிட்ட மதத்தினரைக் குறிவைக்கும் இதுபோன்ற மசோதாக்கள் தேவையில்லாத ஒன்று என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications