அமெரிக்க அதிபரை கைது செய்ய முடியுமா! அந்நாட்டின் சட்டம் சொல்வது என்ன! வினோதமான ரூல்ஸ்
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்கவுள்ளார். கடந்த முறை அதிபராக இருந்த காலகட்டத்திலேயே டிரம்ப் மீது பல புகார்கள் எழுந்திருந்தது. இதற்கிடையே டிரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்கும் சூழலில், அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் மீது அந்நாட்டு போலீசாரால் கைது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதே நெட்டிசன்களிடையே உள்ள கேள்வியாக உள்ளது. அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் இன்னும் சில மணி நேரத்தில் பதவியேற்கவுள்ளார். டிரம்ப் அதிபராகப் பதவியேற்பது இது இரண்டாவது முறை. ஏற்கனவே 2017-2021 வரை அதிபராக இருந்தவர் டிரம்ப்.

டொனால்ட் டிரம்ப்:
அந்த சமயத்தில் டிரம்ப் மீது இரண்டு முறை பதவிநீக்க விசாரணையும் கூட நடந்துள்ளது. இந்தச் சூழலில் அவர் மீண்டும் அதிபராகப் பதவியேற்கும் சூழலில், அதிபர் பதவியில் இருக்கும் ஒருவரைக் கைது செய்ய முடியுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இப்போது இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் தேடும் கேள்வியாகவும் இதுவே இருக்கிறது. ஏதாவது ஒரு குற்றம் அமெரிக்க அதிபர் பதவியில் இருப்போர் மீது சுமத்தப்பட்டால் அவரை கைது செய்ய முடியுமா என்பதே பலருக்கும் இருக்கும் சந்தேகம் ஆகும். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
சட்டம் சொல்வது என்ன:
அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் ஒருவரைக் கைது செய்ய முடியுமா எனக் கேட்டால்.. அதற்கான பதில் சிக்கலான ஒன்று.. அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் வரலாற்று முன்னுதாரணங்கள் எனப் பல விஷயங்களை நாம் இதில் கருத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க அதிபர் பதவியில் இருப்போர் அல்லது மாஜி அமெரிக்க அதிபர்கள் தவறு செய்யும் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அந்நாட்டின் அரசியலமைப்பு நேரடியாக எதையும் குறிப்பிடவில்லை. அதேநேரம் சில வழிகாட்டுதல்களை அது வழங்குகிறது.
அமெரிக்க அரசியலமைப்பின் பிரிவு II, செக்ஷன் 4 என்பது அமெரிக்க அதிபரைப் பிரதிநிதிகள் சபையால் (அமெரிக்காவின் கீழ் சபை) பதவி நீக்கம் செய்ய முடியும் என்று தெளிவாகக் கூறுகிறது. பிரதிநிதிகள் சபையால் குற்றவாளி என நிரூபிக்கப்படும் அதிபரை (அமெரிக்காவின் மேல் சபை) செனட் மூலம் அதிபர் பதவியில் இருந்து நீக்க முடியும்.
நீதித்துறை சொல்வது என்ன:
எனவே, இதன்படி பார்த்தால் அமெரிக்க அதிபர் மீது கைது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அமெரிக்க வரலாற்றில் இதுவரை அதுபோல ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை. கடந்த காலங்களில் இது தொடர்பாகப் புகார்கள் எழுந்த போதும் அதிபர் பதியில் இருக்கும் ஒருவர் மீது குற்றஞ்சாட்டவோ அல்லது வழக்குத் தொடரவோ முடியாது என்ற நிலைப்பாட்டையே அந்நாட்டின் நீதித்துறை எடுத்து வந்துள்ளது.
கைது செய்ய முடியுமா
இதனால் அதிபர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று அர்த்தம் இல்லை. அதிபர் பதவியில் இருக்கும் வரை மட்டுமே அவரை கைது செய்ய முடியாது. அதிபர் பதவியில் இருந்து இறங்கிய உடனேயே அந்நாட்டு போலீசாரால் கைது நடவடிக்கை எடுக்க முடியும். அதுவும் அதிபராக இருந்த போது ஏதாவது குற்றம் செய்திருந்தால்.. அது தொடர்பாகவும் அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகு நடவடிக்கை எடுக்க முடியும் என்பதே பதிலாகும்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications