Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அதிசயம்!" 57 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்.. சந்திரயான்-3 நிலவை தொட்ட நாள்! நாசாவுக்கும் உள்ள கனெக்ஷன்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இஸ்ரோவின் சந்திரயான் 3 நேற்று நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில், 57 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மற்றொரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் நேற்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதிலும் குறிப்பாக யாருமே இதுவரை தரையிறங்காத நிலவின் தென் பகுதியில் சந்திரயான் 3 தரையிறங்கியுள்ளது.

 Chandrayaan 3 landed on the same day When lunar orbit took Earth image on 1966

அடுத்து வரும் நாட்களில் நிலவு குறித்து சந்திரயான் 3 பல்வேறு ஆய்வுப் பணிகளைச் செய்ய உள்ளது. இதற்கிடையே 57 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மற்றொரு சுவாரசிய சம்பவம் குறித்த தகவல்கள் இப்போது இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நிலவு: கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் நிலவு குறித்துத் தொடர்ந்து பல ஆய்வுகளைச் செய்தன. விண்வெளி ஆய்வுகள் குறித்த துறையை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றதே இந்த இரு நாடுகளும் தான். அப்போது இரு தரப்பும் பல்வேறு சாட்டிலைட்கள் அனுப்பின. அதன் பிறகு பல ஆண்டுகள் நிலவு குறித்து பெரிதாக எந்தவொரு ஆய்வும் நடத்தப்படாமலேயே இருந்தது. இதற்கிடையே இப்போது நிலவு குறித்த ஆய்வு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியா தனது சந்திரயானை அனுப்பிய நிலையில், அமெரிக்கா, ரஷ்யா நாடுகளும் மீண்டும் கோதாவில் இறங்கின. அமெரிக்கா தனது ஆர்டெமிஸ் சாட்டிலைட் மூலம் மீண்டும் நிலவு குறித்த ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதேபோல ரஷ்யாவும் லூனா 25 சாட்டிலைட்டையும் நிலவுக்கு அனுப்பியது. நிலவின் தென் துருவத்தில் முதலில் தரையிறங்கும் சாட்டிலைட் என்ற சாதனையை லூனா 25 படைக்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட எதிர்பாராத சிக்கல் காரணமாக அது விழுந்து நொறுங்கியது.

 Chandrayaan 3 landed on the same day When lunar orbit took Earth image on 1966

சந்திரயான் 3: இதையடுத்து நேற்றைய தினம் சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற சாதனையைச் சந்திரயான் 3 படைத்துள்ளது. அடுத்த சுமார் 15 நாட்களுக்கு இந்த சாட்டிலைட் நிலவின தென் துருவத்தில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவது தோல்விகரமாக முடிந்த நிலையில், சந்திரயான் 3 வெற்றிகரமாக இறங்கியுள்ளது.

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய நேற்றைய தினம் ஆகஸ்ட் 23 வரலாற்றில் முக்கியமான ஒரு நாளாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சுமார் 57 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மற்றொரு முக்கிய சம்பவம் நடந்துள்ளது. 57 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1966 ஆம் ஆண்டு இந்த நாளில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தான் சந்திர சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் படம் அமெரிக்காவின் லூனார் ஆர்பிட்டர் 1 ஆல் எடுக்கப்பட்டது..

நாசா கனெக்ஷன்: சந்திர சுற்றுப்பாதையில் இருந்து லூனார் ஆர்பிட்டர் 1 பூமியை எடுத்த படத்தை நாசா பகிர்ந்துள்ளது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் தான் இப்போது சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியுள்ளது. 1966இல் அமெரிக்காவின் நாசா அனுப்பிய லூனார் ஆர்பிட்டர் 1 ஒரு ரோபோடிக் விண்கலமாகும்.. இது நாசாவின் லூனார் ஆர்பிட்டர் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.. சந்திரனைச் சுற்றி வந்த முதல் அமெரிக்க விண்கலமாகும். இந்த விண்கலம் சந்திரனைச் சுற்றி வந்த முதல் அமெரிக்க சாட்டிலைட்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+