பூமியை நோக்கி வரும் 'அழிவின் கடவுள்'! ஈபிள் டவரை விட பெரிய சைஸ் விண்கல்! விஞ்ஞானிகள் ஷாக்!
வாஷிங்டன்: இந்த உலகில் இதற்கு முன்னர் அழிவு ஏற்பட்டதற்கு காரணமாக விண்கற்கள் இருந்திருக்கின்றன. அந்த வகையில், தற்போது ஈபிள் டவரை விட, பெரிய சைஸ் விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அப்போஃபிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல், 2029ம் ஆண்டு பூமியை நோக்கி வரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. எகிப்திய புராணங்களில் வரும் அழிவின் கடவுள் (அப்போஃபிஸ்) பெயரால் இது அழைக்கப்படுகிறது.

இது சுமார் 450 மீட்டர் நீளம் கொண்டது. அதாவது, பிரான்சின் ஈபிள் கோபுரத்தை விடவும் பெரியது. ரேடார் படங்கள் இது ஒரு 'நிலக்கடலை' (Peanut) போன்ற வடிவத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளன. இது இரண்டு விண்கற்கள் ஒன்று சேர்ந்து உருவானதாக இருக்கலாம். இந்த விண்கல் 2029ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 13ம் தேதியன்று இது பூமிக்கு மிக அருகில் வரும். பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 32,000 கி.மீ தொலைவில் இது கடந்து செல்லும்.
நமது ஜிபிஎஸ் (GPS) மற்றும் தொலைக்காட்சி சிக்னல்களை வழங்கும் செயற்கைக்கோள்கள் இருக்கும் வட்டப்பாதையை (35,786 கி.மீ) விடவும் மிக நெருக்கமாக இது பூமியைத் தாண்டிச் செல்லும். இதுதான் இப்போதைய பிரச்சனை. இந்த விண்கல் மிக அருகில் வருவதால், டெலஸ்கோப் இல்லாமலேயே கிராமப்புறங்களில் இருந்து வெறும் கண்ணால் பார்க்க முடியும்.
இது ஒரு மணி நேரத்திற்கு வானில் சுமார் 42 டிகிரி தூரம் நகரும். அதாவது, நம் கையை நீட்டி விரல்களை மடக்கினால் வரும் அளவை விட 4 மடங்கு வேகத்தில் வானில் நகர்வதை நேரலையாகப் பார்க்கலாம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இது தெளிவாகத் தெரியும்.
கடந்த 2004-இல் இது கண்டுபிடிக்கப்பட்ட போது மோத வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பூமிக்கு பாதிப்பு இல்லை என்றாலும், பூமியின் ஈர்ப்பு விசை அந்த விண்கல்லில் மாற்றங்களை ஏற்படுத்தும். விண்கல்லின் சுழற்சி வேகம் மாறலாம் அல்லது அதில் நிலச்சரிவுகள் ஏற்படலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications