மனிதர்களை தூக்கி சாப்பிடும் சாட் ஜிபிடி.. எதிர்காலத்தை கூட துல்லியமாக கணிக்குதாம்.. பரபர ஆய்வு
வாஷிங்டன்: ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை வைத்து அந்த குறிப்பிட்ட நிறுவனம் எதிர்காலத்தை எந்தளவுக்குச் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை மனிதர்களைக் காட்டிலும் சாட்ஜிபிடி துல்லியமாகக் கணிப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் அதிவேகமாக வளரும். கணினி, இணையதளம், மொபைல் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் மிகச் சிறந்த வளர்ச்சியை அடைந்தது.

அதுபோல இந்த காலகட்டம் என்பது ஏஐ மாடல்களுக்கானது என்பதை நாம் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். அதிலும் குறிப்பாக சாட்ஜிபிடி வெற்றி ஏஐ துறைக்கு மிக பெரிய பூஸ்டாக இருந்துள்ளது.
ஏஐ: அதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுக்கும் ஏஐ சார்ந்து தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் இதுபோன்ற ஏஐ மாடல்கள் மனிதர்களின் வேலையைப் பறித்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே ப்ரீபிரிண்ட் என்ற ஆய்விதழில் இது குறித்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
அதில் ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை வைத்து அந்த குறிப்பிட்ட நிறுவனம் எதிர்காலத்தை எந்தளவுக்குச் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை மனிதர்களைக் காட்டிலும் சாட்ஜிபிடி துல்லியமாகக் கணிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை 56.7 சதவீதம் துல்லியமாகக் கணித்த நிலையில், சாட் ஜிபிடி 60.31% துல்லியமாகக் கணித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஜிபிடி 4: பொதுவாகப் பெரிய நிறுவனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை மதிப்பிடுவது சிக்கலான ஒன்று. ஏனென்றால் அவற்றின் செயல்பாடுகள் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும். ஆனாலும் அனைத்தையும் ஆய்வு செய்ய இந்த சாட் ஜிபிடி 4 துல்லியமான கணிப்புகளைச் செய்துள்ளது. மேலும், ஏற்கனவே இப்போது சில நிறுவனங்கள் சாட் ஜிபிடி போன்ற ஏஐ மாடல்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் ஆய்வாளர்கள் சாட் ஜிபிடி 4 மாடலில் பல முக்கிய பெரு நிறுவனங்களின் தரவுகளைக் கொடுத்துள்ளனர். "செயின்-ஆஃப்-தாட்' (CoT) என்ற முறை ஏஐ மாடலுக்கு இந்த தரவுகளை ஆய்வு செய்ய கற்றுக் கொடுத்துள்ளது. அப்போது தான் சாட் ஜிபிடி பெரு நிறுவனத்தின் செயல்பாடுகள் 60.31% வரை துல்லியமாகக் கணித்துள்ளது. இது மனிதர்களை ( 56.7%) விட அதிகமாகும்.
மனிதர்கள் வேலை போகுமா: இதைப் படித்தவுடன் எங்கு மனிதர்கள் வேலை மொத்தமாக காலியாகிவிடுமோ என்ற அச்சம் வரலாம்.. அதேநேரம் சாட் ஜிபிடி நிச்சயம் மனிதர்களின் வேலையை முழுமையாகத் தன்வசப்படுத்தாது என்பதும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மனிதர்கள் எங்கெல்லாம் பக்கச்சார்பைக் காட்டுவார்களோ எதையெல்லாம் ஒப்புக் கொள்ளத் தயங்குவார்களோ.. அந்த பகுதிகளில் துல்லியமான முடிவைக் கண்டறிய சாட் ஜிபிடி உதவும். அதேநேரம் நிதிநிலை அறிக்கைகளில் கிடைக்காத கூடுதல் தகவல்கள் அல்லது தனிப்பட்ட அனுபவங்கள் மூலம் மனிதர்கள் செய்யும் கணிப்புகளுக்கு எப்போதும் தனி மதிப்பு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சாட் ஜிபிடி: சாட் ஜிபிடி ஏஐ மாடலை ஓபன் ஏஐ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் இருக்கிறார். சாட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதேநேரம் சாட் ஜிபிடி முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது இல்லை என்று கூறி அந்நிறுவனத்தில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகள் அந்நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications