லாட்டரியில் பரிசு அடிக்கும் நம்பரை கரெக்டாக சொன்ன சாட்ஜிபிடி! கோடிகளை பரிசாக அள்ளிய பெண்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: லாட்டரி டிக்கெட் வாங்க கூட காசு இல்லாமல் கடன் வாங்கி லாட்டரி சீட்டு வாங்கியவர்களுக்கு கூட முதல் பரிசு அடித்து அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்திகளை பார்த்து இருப்போம். ஆனால் இங்கே அதற்கும் மேல் ஒரு படி சென்று, "எந்த எண்ணுக்கு பரிசு அடிக்கும் என்பதை சாட்ஜிபிடியிடம் கேட்டு அந்த எண்ணுக்கு டிக்கெட் வாங்கியவருக்கு ரூ.1 கோடியே 32 லட்சம் பரிசாக அடித்துள்ள சம்பவம்" அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.

"கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்" என்று சொல்வார்கள். இது எதற்கு பொருந்துகிறதோ.. இல்லையோ லாட்டரியில் பரிசு அடிப்பவருக்கு பொருந்தும் என்று சொல்லலாம். லாட்டரி டிக்கெட் வாங்க கூட காசு இல்லாமல் பரிதவித்து கடனாக வாங்கிய டிக்கெட்டிற்கு கூட சில சமயம் கோடிகளில் பரிசுத்தொகை அடித்து அனைவரையும் பொறாமைப்பட வைத்துவிடும்.

chatgpt-predicts-winning-lottery-numbers-woman-wins-millions-in-jackpot

லாட்டரி பரிசு

லாட்டரிகளில் விட்ட பணத்தை சேமித்தால் கூட இன்று லட்சாதிபதியாகி இருக்கலாம் என்று சொல்லும் நிகழ்வுதான் நிதர்சனம் என்றாலும், ஏதோ ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அடித்து வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிறது. இப்படி மேஜிக் நடப்பதற்கு அதிர்ஷ்டம் அல்லது அதற்கு என்ன பெயர் உண்டோ அதை வைத்துக் கொள்ளலாம். அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.

லாட்டரிகளில் பரிசு அடித்தவர்கள் சொல்லக்கூடிய விஷயம் சில நேரங்களில் வியப்பை அளிப்பதாக இருக்கும். லாட்டரி வாங்கும் எண்ணமே இல்லாமல் வேண்டா வெறுப்பாக வாங்கிய டிக்கெட்டிற்கு பரிசு அடித்ததாக கூட சொல்வார்கள். சிலரோ பரிசு விழாது என்ற கோபத்தில் டிக்கெட்டை கிழித்துப்போட்டுவிட்டு அதன்பிறகு பரிசு விழுந்ததும், குப்பைத் தொட்டியை சல்லடை போட்டு தேடுவதையும் பார்க்க முடியும்.

சாட்ஜிபிடியில் ஐடியா கேட்ட பெண்

ஆனால் அதை விட முற்றிலும் வித்தியாசமான ஒரு நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் சாட்ஜிபிடியை வைத்து லாட்டரியில் பரிசு அடித்துள்ளார். கடந்த 8ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பவர்பால் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் எந்த டிக்கெட் எண்ணை தேர்வு செய்வது என்று குழப்பம் கேரி எட்வர்ட்ஸ் என்ற விர்ஜினியா மாகாண பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது.

1,50,000 டாலர் மதிப்பு கொண்ட லாட்டரி விளையாட்டில் எந்த எண்ணை எடுக்கலாம் என்று யோசித்துவிட்டு கடைசியில் சாட்ஜிபிடியிடம் ஐடியா கேட்டுள்ளார் கேரி எட்வர்ட்ஸ். இதையடுத்து சாட்ஜிபிடி சில எண்களை கொடுத்துள்ளது. அந்த எண்ணை பிக் செய்தவருக்கு 2 நாள் கழித்து லாட்டரி செயலியில் இருந்து நோட்டிபிகேஷன் வந்துள்ளது.

கனவா இல்லை நனவா

உங்களுக்கு பரிசு அடித்திருக்கிறது என்று மெசேஜை பார்த்ததும், நடப்பது கனவா, நனவா என நம்ப முடியாமல் தன் கையையே கிள்ளிப் பார்த்து இருக்கிறார். தனக்கு அடித்த பரிசுத்தொகையை மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்க கேரி எட்வர்ட்ஸ் முடிவு செய்துள்ளார். இப்படி திடீரென அடித்துள்ள அதிர்ஷ்டம் பிறருக்கு உதவுவதற்குத்தான் என்று கூறியுள்ளார் கேரி எட்வர்ட்ஸ். கேரி எட்வர்ட்ஸுக்கு லாட்டரியில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 32 லட்சம் பரிசு அடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+