இதுதான் பகுத்தறிவா.. முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் திருஷ்டி சுத்தி வரவேற்பு.. எழுந்த எதிர்ப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை, அமைச்சர் டிஆர்பி ராஜா, நடிகர் நெப்போலியன் உள்பட பலர் வரவேற்றனர். சான் பிரான்ஸிஸ்கோ நகரின் விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல்வருக்கு, அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திருஷ்டி சுத்தி போட்டும் சிலர் வரவேற்றனர். இதுதான் பகுத்தறிவா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் , மாநிலத்தின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அவர் அழைப்பு விடுத்தார்.

அதன் பின்னர் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். ஹூண்டாய், ஓலா, கோத்ரேஜ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்கவும், விரிவாக்கம் செய்வதாகவும் அறிவித்தன. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அறிவித்தன.
டாடா எலெக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், மிட்சுபிஷி, ஹுண்டாய், ஜேஎஸ்டபுள்யு, வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மொத்தம் 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே அமெரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரின் விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் இன்று அதிகாலை (இந்திய நேரப்படி) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க மண்ணில் தரையிறங்கியபோது முதல்வர் ஸ்டாலினை, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வரவேற்றார். இதேபோல் வெளிநாட்டு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் பல்வேறு அதிகாரிகள் வரவேற்றனர். இதேபோல் நடிகர் நெப்போலியன் தனிப்பட்ட முறையில் நேரில் சென்று முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார். இதேபோல் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட போது, சிலர் முதல்வர் ஸ்டாலினுக்கு, தேங்காய் வைத்தும், சிலர் திருஷ்டி சுத்தியும் வரவேற்றனர். இதை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சியினர், பகுத்தறிவு பேசும் ஸ்டாலின் அவர்களே , இதுதான் பகுத்தறிவா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications