உடலையே உருக்கிவிடும்.. இந்திய வீரர்களுக்கு எதிராக எலக்ட்ரோ மேக்னட்டிக் ஆயுதத்தை யூஸ் செய்த சீனா? அமெரிக்கா பகீர்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வரி விதிப்பால் நம் நாடும், சீனா இடையேயான உறவு வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எல்லை மோதலில் இந்திய வீரர்களை உருக வைக்கும் எலக்ட்ரோ மேக்னட்டிக் ஆயுதத்தை பயன்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் பில் ஹாகர்ட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி போட்டுள்ளார். அதேபோல் சீனாவுக்கு 145 சதவீத வரியை அறிவித்தார். இதில் 30 சதவீத வரி மட்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதவிர ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மற்றும் சீனாவுக்கு 50 முதல் 100 சதவீத வரியை விதிக்க வேண்டும் என்று நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதற்கிடையே தான் டிரம்பை சமாளிக்க இந்தியாவும், சீனாவும் கைகோர்த்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருநாடுகள் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. தற்போது டிரம்பால் இந்தியாவும், சீனா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
வலுவாகும் சீனா - இந்தியா உறவு
கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நம் நாட்டுக்கு வந்தார். அதேபோல் கடந்த மாதம் 31 மற்றும் 1ம் தேதி பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண்பது மற்றும் வர்த்தகம் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். இது டிரம்புக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் இந்தியா - சீனா உறவு வலுப்பெற தொடங்கி உள்ளது.
டிரம்ப் கட்சி செனட்டர் கட்சி
இதையடுத்து தான் அவர் இந்தியா, சீனாவுக்கு 50 முதல் 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதற்கிடையே தான் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் பில் ஹாகர்ட்டி சீனா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
‛‛சீனாவுக்கும், இந்தியாவுக்கும் நீண்ட காலமாக மனக்கசப்பு உள்ளன. 5 ஆண்டுக்கு முன்பு சீனாவிற்கும், இந்தியாவிற்கும் எல்லை பிரச்சனை ஏற்பட்டது. அப்போது இருநாடுகளும் மோதிக்கொண்டன. அந்த சமயத்தில் சீனா எலக்ட்ரோ மேக்னட்டிக் ஆயுதங்களை இந்திய வீரர்களுக்கு எதிராக பயன்படுத்தியது'' என்றார். அவரது இந்த குற்றச்சாட்டு சர்ச்சையை கிளப்பியது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதல்
மேலும் அவர் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். தனது உரையில் அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா - சீனா இடையே நடந்த பிரச்சனை என்று தெரிவித்துள்ளார். அதன்படி பார்த்தால் 2020 ஜூன் மாதம் தான் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல் சீனாவின் வீரர்கள் பலியாகினர். இதனால் அவரது குற்றச்சாட்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அதுபற்றி மேற்கொண்டு எதையும் அவர் கூறவில்லை.
"China used electromagnetic weapons to literally melt Indian soldiers," claims US Senator Bill Hagerty in a bizarre statement pic.twitter.com/ZiYk7BcqTe
— Shashank Mattoo (@MattooShashank) September 11, 2025
இந்தியா சொல்வது என்ன?
கல்வான் மோதல் சமயத்தில் இதுபோன்ற செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டன. இந்திய வீரர்களுக்கு எதிராக சீனா, மைக்ரோவேவ் அலைகளை உருவாக்கும் ஆயுதங்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்தது.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛கிழக்கு லடாக்கில் மைக்ரோவேவ் ஆயுதங்களை சீனா பயன்படுத்தியதாக மீடியாக்களில் வெளியான ஆர்ட்டிக்கிள்கள் அடிப்படை ஆதாரமற்றது. அந்த செய்திகள் பொய்யானவை. அப்படி எந்த சம்பவமும் லடாக்கில் நடக்கவில்லை'' என்று கூறியிருந்தது. இப்போது சீனா - இந்தியா இடையே உறவு வலுப்பெறும் நிலையில் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் பில் ஹெகர்டி இப்படி கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications