ஸ்கெட்ச் சீனாவுக்கு இல்லை.. தெரியாம மாட்டிக்கிட்ட என்விடியா சிஇஓ! வெளியான முக்கிய தகவல்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங், சீன உளவாளியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு அவர் தனது சிஇஓ பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். இருப்பினும் இவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண், சீன உளவாளிதான் என்பதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.

அமெரிக்க விசாரணை அமைப்புகள் இப்படி சொல்லியிருப்பதால், உண்மையாகவே ஸ்கெட்ச் சீனாவுக்கா? அல்லது 33 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பெஞ்ச்சை தேய்த்துக்கொண்டிருக்கும் ஜென்சனுக்கா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

Chinese Spy Claims

பஞ்சாயத்து இதுதான்

என்விடியா நிறுவனம், சிங்கப்பூரை சேர்ந்த 'மெகாஸ்பீட்' நிறுவனத்துடன் வர்த்தக உறவை வைத்திருந்தது. 'மெகாஸ்பீட்' என்பது டேட்டா சென்டர் நிறுவனம். இப்போது இது AI நிறுவனமாகவும் வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர்தான் ஆலிஸ் ஹுவாங். 'ஹுவாங்' என்கிற பெயர் வருவதால் ஜென்சனும், ஆலிஸும் உறவினர்கள் கிடையாது. நம்மூரில் அருன் குமார், ரவிக்குமார் என குமார் என்கிற பெயர் பொதுவாக வருவதை போல.. சீனாவில் உள்ளவர்களில் சிலர் பொதுவாக ஹுவாங் என்கிற பெயரை சேர்த்துக்கொள்வார்கள்.

பெயரை சேர்த்தது பிரச்சனை கிடையாது.. பெயரை சேர்ந்த ஆலிஸை தன்னுடன் சேர்த்துக்கொள்ள ஜென்சன் நினைத்ததுதான் பிரச்சனை. ஆலிஸுக்கு 30-35 வயதிருக்கும். ஜென்சனுக்கு 60ஐ தாண்டிவிட்டது. கேட்டால் காதலாம்! இது போதாது என.. தன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இன்னொரு பெண்ணுடனும் குதுகலமாக இருந்திருக்கிறார் ஜென்சன். இதற்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் என தெரியவில்லை. அட இதுகூட பரவாயில்லைங்க.. 3வதாக இன்னொரு பெண்ணுடனும் கடலை போட்டு வந்திருக்கிறார்.

இப்படி ஏகபோகமாக வழந்தவருக்கு.. வழுக்கை விழுந்ததோ இல்லையோ! வாழ்க்கையில் பெரிய இடி விழுந்தது. இவர் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் ஆலீஸ், சீன உளவாளி என்று அமெரிக்க விசாரணை அமைப்புகள் கூறியுள்ளன.

அவ்வளவுதான்.. மொத்தமாக முடிந்தது. சீன உளவாளி என்று அமெரிக்க அரசு சும்மா இருக்குமா? ஜென்சன் கொடுத்த முத்தம் உட்பட.. மொத்தத்தையும் தோண்டி எடுத்திருக்கிறது. விசாரணை நெருக்கவே.. பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் ஜென்சன்.

நிலைமை இப்படி இருக்கையில், ஆலிஸ் சீன உளவாளிதான் என்பதை நிரூபிக்கும் ஆதாரம் தங்களிடம் இல்லை என்று, அமெரிக்க விசாரணை அமைப்புகள் கூறியிருப்பதாக CNN செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க, ரஷ்ய உளவாளிகள் போல.. சீன உளவாளிகளை அவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடித்துவிட முடியாது.

இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்னு மட்டும் புரியுது. கடந்த 33 ஆண்டுகளாக சிஇஓ சீட்டை தேய்துக்கொண்டிருந்த ஜென்சனை காலி செய்ய.. உள்ளிருந்தே யாரோ சீன உளவாளி கதையை கிளப்பியிருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் பேச தொடங்கியிருக்கிறார்கள். சீன உளவாளி குற்றச்சாட்டு உண்மை எனில், அதை அமெரிக்கா நிரூபித்திருக்க வேண்டியதுதானே! அப்படி நடக்கவில்லை. கடந்த ஓராண்டாக ஆலிஸ் தொடர்பான தகவல்களை CIA, FBI சேகரித்து வந்திருக்கிறது. இருப்பினும் நிரூபிக்க முடியவில்லை. எனில், ஸ்கெட்ச் சீனாவுக்கு இல்லை.. ஜென்சனுக்குதான் என்றும் பேசப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+