ஓசூருக்கு அடித்த ஜாக்பாட்.. ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனம் சார்பில் ரூ.100 கோடி முதலீடு.. தப்பாத ஸ்டாலினின் குறி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.100 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தமிழகம் - கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஓசூரில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். விமான நிலையத்துக்கு அனுமதி வாங்குவது தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன.

mk stalin america hosur

இது ஒருபுறம் இருக்க அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். கடந்த மாதம் 27 ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்ற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு தொழில் நிறுவனங்களில் செயல் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

இதற்கு பல முன்னணி நிறுவனங்கள் ‛ஓகே' சொல்லி தொழில் தொடங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக அரசுடன் மேற்கொண்டன. அந்த வகையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய நிறுவனம் தொடங்க அமெரிக்காின் ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுடன் கையெழுத்தானது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‛‛ அமெரிக்காவின் ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனம் ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்கிறது. ஓசூரில் மேம்பட்ட மின்னணு, டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம் அமைக்க உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு பணியாளர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனம் வழங்குகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அமெரிக்காவில் 18 முன்னணி நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்த முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை புறப்பட்டுள்ளார். சிகோகோ விமான நிலையத்தில் இருந்து இன்று கிளம்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+