"சபாஷ் சுபாஷினி".. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்.. நாசாவுடன் இணைந்து கலக்கும் கோவையின் மங்கை
நாசா பணியில் கோவையை சேர்ந்த சுபாஷினி ஐயர் முக்கிய பங்காற்றி வருகிறார்
வாஷிங்டன்: அமெரிக்கா முழுக்க சுபாஷினி ஐயர் பற்றிதான் பேச்சு.. நிலவுக்கு மனிதர்களை நாசா அனுப்ப போகிறது.. அதில்தான், சுபாஷினியும் இணைந்து செயல்பட்டு வருகிறார்.. இவர் நம்ம கோவையை சேர்ந்தவர் என்பதுதான் ஸ்பெஷல் தகவல்..!
நிலவை பற்றின ஆய்வில் தொடர்ந்து உலக நாடுகள் ஈடுபட்டு வந்தாலும், அமெரிக்கா அதில் முன்னணியில் உள்ளது.. விரைவில் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்ப போகிறது..
இதற்காக "ஆர்ட்டெமிஸ்" என்ற திட்டத்தை துவங்கி உள்ளது.. விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.. இந்த திட்டத்தில்தான், சுபாஷினி ஐயர் இடம் பெற்றுள்ளார்.

படிப்பு
இவர் ஒரு என்ஜினியர்.. கோயம்புத்தூரில் பிறந்தவர்.. விஎல்பி ஜானகியம்மாள் காலேஜில், 1992ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்துள்ளார். இந்த காலேஜில், மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் முதன் முறையாக பட்டம் பெற்ற பெண்களில் சுபாஷினியும் ஒருவர்.

பணி
நாசாவில் 2 வருடமாக வேலை பார்த்து வருகிறார்.. சந்திரனுக்கு அனுப்பப்படும் விண்கலத்தின் முக்கிய பகுதிகளை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பணியில் இவர் தலைமை தாங்கி ஈடுபட்டுள்ளார்... இதனால், இவரது பங்கு அளப்பரியதாக இருக்கிறது.

பங்கு
இதைபற்றி சுபாஷினி சொல்லும்போது, "நிலவுக்கு விண்வெளி வீரர்களை அழைத்து சென்று 50 வருஷம் ஆகிறது.. அதனால், 2வது முறையாக விண்வெளி வீரர்களை அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்... அதற்கான பிரத்யேக ராக்கெட் தயாராக்கப்படுகிறது.. அந்த ராக்கெட் தயாராகி, நாசாவிடம் ஒப்படைக்கப்படுவதை கண்காணிப்பதுதான் என்னுடைய பணி.. இதைதவிர, பிற தேவைகள் ஏதாவது ஏற்பட்டால் அதையும் நிவர்த்தி செய்து வருகிறேன்" என்றார்.

விண்கலம்
நாசா துவங்கி உள்ள இந்த லட்சிய திட்டமான "ஆர்ட்டெமிஸ்" என்பது எஸ்எல்எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை சந்திரனின் சுற்றுப்பாதைக்கு அனுப்பவதாகும்... இத்தகைய முயற்சியில் நாசா வெற்றிபெற்றுவிட்டால், அதில் சுபாஷினியின் பங்கும் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications