உயிருடன் எரித்து கொல்ல முயற்சி.. அமெரிக்காவில் இஸ்ரேல் ஆதரவு பேரணியில் வெறிச்செயல்! ஷாக் வீடியோ
வாஷிங்டன்: அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் திடீரென வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. அங்குப் பேரணி சென்று கொண்டிருந்தோரை உயிருடன் தீ வைத்து எரிக்க ஒருவர் முயன்றுள்ளார். இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான அதிர்ச்சி தரும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அமெரிக்கா எப்போதுமே இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருக்கும். பல ஆண்டுகளாகவே அதுவே அமெரிக்காவின் நிலைப்பாடாக இருக்கிறது. இப்போது இஸ்ரேல்-ஹமாஸ் மோதலிலும் கூட இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்காவே பின்னால் நின்று கொடுத்து வருகிறது.

அப்படி தான் அங்கு கொலராடோவில் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் சிலர் பேரணி நடத்த முயன்றுள்ளனர். அப்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒருவர் கோஷமிட்டுக் கொண்டே தாக்குதலையும் நடத்தியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் தாக்குதல்
அமெரிக்காவின் கொலராடோவில் குடியிருந்த மக்கள் மீது திரவம் ஒன்றை வீசி, அவர்கள் மீது தீயைப் பற்ற வைக்க முயன்றுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் முகமது சப்ரி சோலிமான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபர் கூட்டத்தைத் தாக்கும் போது "பாலஸ்தீனத்தை விடுவிப்போம்" என்று கோஷமிட்டுள்ளார்.
என்ன நடந்தது?
கொலராடோவின் போல்டர் என்ற பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அங்கு இஸ்ரேல் காசாவில் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகளை நினைவுகூரும் வகையில் ஒரு பேரணி நடந்தது. இதில் அந்த பகுதியில் வசிக்கும் யூதர்கள் பெரியளவில் கலந்து கொண்டனர்.. அங்கே உள்ளே புகுந்த சப்ரி சோலிமான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அந்த நபரைக் கைது செய்தனர்..
இந்த நபர் நடத்திய தாக்குதலால் 67 முதல் 88 வயதுக்குட்பட்ட ஆறு பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் இப்போது தீக்காயங்களுடன் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷம்
அமெரிக்காவில் நடந்த இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் சட்டை அணியாத அந்த நபர், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகக் கோஷமிடுகிறார். மேலும், அவர் போராட்டக்காரர்களை நோக்கி, "நீங்கள் எத்தனை குழந்தைகளைக் கொன்றீர்கள்?" என்று கத்துவது தெளிவாகக் கேட்கிறது. அப்போது ஒருவர் அங்கே வந்து, "நீ இப்படியெல்லாம் செய்யக்கூடாது" என்கிறார். ஆனால், அதைக் கண்டுகொள்ள அந்த நபர், "நான் அப்படி தான் செய்வேன்" என்பது போல பதிலளிக்கிறார்.
தாக்குதலைத் தொடர்ந்து அருகே இருந்தவர்கள் ஓடிச் சென்று பாதிக்கப்பட்டோருக்கு உதவினர். தீக்காயங்களால் ஏற்பட்ட வலியால் பாதிக்கப்பட்டோர் துடித்துக் கொண்டு இருந்த நிலையில், அவர்களுக்கு அக்கம் பக்கத்தினர் உதவினர்.
Pro-Hamas supporters should be categorized as domestic terrorists!! pic.twitter.com/cNLWq42Swm
— Jammles (@jammles9) June 1, 2025
தீவிரவாத தாக்குதல்?
இந்தச் சம்பவம் குறித்து இப்போது எஃப்.பி.ஐ விசாரணையில் இறங்கியுள்ளது. இதைப் பயங்கரவாத தாக்குதல் என்று எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இந்தத் தாக்குதலை வைத்துப் பார்த்தால் வெறுப்பு தாக்குதல் (Hate crime) போலவே தெரிவதாக கொலராடோ அட்டர்னி ஜெனரல் பில் வீசர் தெரிவித்தார்.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
கடந்த 2023ல் இஸ்ரேல் நாட்டில் புகுந்து ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஹமாஸை மீது போரை ஆரம்பித்த இஸ்ரேல், காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம் இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் கூட கொல்லப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications