Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலாய் லாமாவிற்கு சர்ச்சை புதுசு இல்லை.. இதற்கு முன் எப்படியெல்லாம் பேசி சிக்கியிருக்காரு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தலாய் லாமா சிறுவனுக்கு முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு மத தலைவர் செய்யும் வேலையா இது என பலரும் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்தனர். தலாய் லாமா இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல.. ஏற்கனவே அவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதில் சில நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.

திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா. இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தங்கியிருக்கும் தலாய் லாமா, அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்.

உலகம் முழுவதும் வசிக்கும் புத்த மத்தைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் மதத் தலைவராக இருக்கும் தலாய் லாமா, திபெத்தின் ஆட்சித் தலைவராகவும் கருதப்படுகிறார். சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் திபெத் வந்த பிறகு அந்த நாட்டின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க இந்தியாவில் தஞ்சம் புகுந்த தலாய் லாமா, தற்போது இமாச்சல பிரதேச மாநிலம் தர்ம்சாலாவில் வசித்து வருகிறார்.

 Controversy is not new to the Dalai Lama, see how he has been caught talking before

மன்னிப்பு கேட்ட தலாய் லாமா:தலாய் லாமா தற்போது ஒரு சிறுவனுக்கு முத்தம் கொடுப்பது சர்ச்சையை கிளப்பியது. அந்த சிறுவன், தலாய் லாமாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறான்.. அப்போது அந்த சிறுவனின் வாயில் தலாய் லாமா முத்தம் கொடுக்கிறார்.. தொடர்ந்து தன்னுடைய நாக்கை நீட்டி, சிறுவனின் நாக்கால் தன் நாக்கை தொடும்படி தலாய் லாமா சொல்கிறார்..

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ பரவி கடும் சச்சையை ஏற்படுத்தியது. ஒரு மத தலைவர் செய்யும் வேலையா இது என பலரும் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்தனர். தலாய் லாமாவின் செயல்பாடு அருவருப்பானது, கேவலமானது, கண்டனத்திற்குரியது என உலகம் முழுவதிலும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, தனது செயலுக்கு மன்னிப்பு கேட்பதாக தலாய் லாமா அறிவித்தார்.

இது தொடர்பாக தலாய் லாமா கூறுகையில், "சிறுவன், அவரது குடும்பம் மட்டுமின்றி உலக சகோதரர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். தன்னுடைய செயல் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்" என்று கூறியிருந்தார். இதனால், இந்த விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், தலாய் லாமா இப்படி சர்ச்சையில் இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே பலமுறை தலாய் லாமா சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

 Controversy is not new to the Dalai Lama, see how he has been caught talking before

கடும் விமர்சனங்கள்:* கடந்த 2019 ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சி தலாய் லாமா பேட்டி அளித்தார். அப்போது, தனக்கு பிறகு ஒரு பெண் ஒருவர் தலாய் லாமாவாமாக வந்தால், அவர் கவர்ச்சிகரமானவராக இருக்க வேண்டும் என்று பேசினார். இது தொடர்பாக அவர் கூறும் போது, பெண் தலாய்லாமா வருவது என்றால், அவர் மிகவும் கவர்ச்சிகரமானவராக இருக்க வேண்டும்.

தொடர்ந்து தனது முகத்தை கொஞ்சம் கோணலாக மாற்றிக்கொண்டு.. பெண் தலாய் லாமா இதுபோன்று இருந்தால்.. மக்கள் அவரை பார்க்க விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன்" என்றார். இந்த கருத்து கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து தனது கருத்துக்கு தலாய் லாமா மன்னிப்பு கோரியிருந்த்நார்.

* பின்னர் அதே ஆண்டு அகதிகள் விவகாரம் குறித்து பேசும் போது தலாய் லாமா சர்ச்சையில் சிக்கினார். ஐரோப்பா ஐரோப்பியர்களுக்கு சொந்தமானது. அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். அவர்களை(அகதிகளை) ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும்..

 Controversy is not new to the Dalai Lama, see how he has been caught talking before

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தால்..

அவர்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும்.. ஆனால், இறுதியில் அவர்கள் தங்கள் சொந்த நாட்டைத்தான் முன்னேற்ற வேண்டும் என்று அகதிகள் விவகாரம் குறித்து ஸ்வீடனின் மால்மோ நகரத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசும் போது கூறி சர்ச்சையில் சிக்கினார்.

* கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தலாய் லாமா பேசிய கருத்து கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. தலாய் லாமா கூறுகையில், "இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தால் முகம்மது அலி ஜின்னாவை இந்தியாவின் முதல் பிரதமராக பார்க்க வேண்டும் என்ற காந்தியின் விருப்பம் நிறைவேறியிருக்கும்.

நேருவின் சுயநலமான அணுகுமுறையே முகம்மது அலி ஜின்னா இந்தியவின் முதல் பிரதமராக நியமிக்கப்படாததற்கான காரணம் ஆகும்" என்றார். தலாய் லாமாவின் இந்தக் கருத்தும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+