அமெரிக்காவில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா... 5 லட்சத்தை எட்டிய உயிரிழப்பு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24.28 லட்சமாக உயர்ந்துள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா ஓர் ஆண்டை கடந்தும் உலக நாடுகளை ஆட்டம் காண வைத்து வருகிறது. மேலும்,. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வேறு பரவி அச்சறுத்தி வருகிறது.

Corona at the peak in the US; 5 lakh deaths

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 கோடி பேராக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 24.28 லட்சமாகும். அது போல் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8.48 கோடியாகும். அமெரிக்காவில் கொரோனா தொடந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு புதியதாக மேலும் 58,762பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்த பாதிப்பு 28,376,584 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 1,570 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 499,774 ஆக அதிகரித்து உள்ளது.இங்கிலாந்தில் புதிதாக 10,625 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது. மேலும் 799 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் புதிதாக 55,271 பேருக்கு பாதிப்பும், மேலும் 1,088 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 13,233 பேருக்கு பாதிப்பும், 459 பேர் இறந்தும் உள்ளனர்.

பிரான்சில் 19,590 பேருக்கும், இத்தாலியில் 10,386 பேருக்கும், துருக்கியில் 7,906 பேருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தொற்று பாதிப்பில் உலகளவில் 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் புதிதாக 11,795 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 109 பேர் இறந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+